search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rajiv gandhi"

    • மாநில எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ். கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
    • அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் தெலுங்கானா அன்னையின் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சிலை அமைக்க முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அடிக்கல் நாட்டினார்.

    இதற்கு அந்த மாநில எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ். கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ராஜீவ் காந்தி சிலை வைக்க அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் தெலுங்கானா அன்னையின் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

    அந்த இடத்தில் ராஜீவ் காந்தி சிலையை அமைக்க கூடாது. தெலுங்கானா அன்னை சிலை மாநிலத்தின் கலாச்சார அடையாளத்தை குறிக்கிறது. எனவே தலைமைச் செயலக வளாகத்தில் ராஜீவ் காந்தி சிலை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்.

    அந்த இடத்தில் தெலுங்கானா அன்னை சிலையை வைக்க வேண்டும் என சந்திரசேகர ராவின் மகள் கவிதா வலியுறுத்தி உள்ளார்.

    • திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டார்.
    • முருகனை அழைத்து வர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி உள்பட நான்கு பேரை விடுவித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த முருகன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவரது பூர்வீகம் இலங்கை என்பதால் அவர் திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டார்.

    இதையடுத்து திருச்சி முகாமில் இருக்கும் முருகன், லண்டன் செல்ல அனுமதி கோரி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் தனபால் அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிடர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் முருகனை லண்டனுக்கு அனுப்ப முடியாது என தெரிவித்தார்.

    மேலும், இலங்கை நாட்டின் துணை தூதரகம் ஆவணங்களை வழங்கினால் மட்டும் தான் முருகனை இலங்கைக்கு திருப்பி அனுப்ப முடியும் என்று தெரிவித்து இருக்கிறார். திருச்சி சிறப்பு முகாமில் இருந்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முருகனை அழைத்து வர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்து இருக்கிறது.

    முன்னதாக உயர்நீதிமன்ற கிளையில் முருகன் தாக்கல் செய்த மனுவில் "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எனக்கும், என் மனைவி நளினிக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவால் விடுதலை செய்யப்பட்டோம். நான் முகாமிலும், என் மனைவி, மகள் தனியாகவும் வசித்து வருகின்றனர். எனது மகள் லண்டனில் உள்ளார்."

    "32 ஆண்டுகள் சிறையில் இருந்தேன். எஞ்சியுள்ள காலத்தில் லண்டனில் உள்ள மகளுடன் வசிக்க ஆசைப்படுகிறோம். இதற்காக பாஸ்போர்ட் பெற பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கவும், ஆன்லைன் வழியாக இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ள அனுமதிக்க உத்தரவிட வேண்டும்," என்று கூறப்பட்டு இருந்தது.

    • செவிலியர்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
    • தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.

    சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.

    • ராஜீவ்காந்தியின் சிலையை சிலர் உடைத்து சேதப்படுத்தி இருக்கிறார்கள்.
    • சிலையை சேதப்படுத்தியவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்.

    நெல்லை:

    தமிழக காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டம், தோவாளை தாலுகாவுக்கு உட்பட்ட பூதப்பாண்டி அருகே அருமநல்லூரில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் உருவச்சிலை சில சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.

    மிகுந்த போற்றுதலுக்கு உரிய தலைவர் ராஜீவ்காந்தி. இந்த நாட்டுக்காகவே வாழ்ந்தவர். நம்முடைய தமிழ் மண்ணில்தான் உயிர் துறந்தார்.

    அப்படிப்பட்டவரின் உருவ சிலையை சிலர், தீய எண்ணத்தோடு, உடைத்து சேதப்படுத்தி இருக்கிறார்கள். இது மன்னிக்க முடியாத செயல். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

    அமரர் ராஜீவ்காந்தியின் உருவ சிலையை சேதப்படுத்தியவர்களை காவல்துறை உடனடியாக கைது செய்து, குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

    • ராஜபாளையத்தில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா நடந்தது.
    • எஸ்.சி துறை தலைவர் கோவிந்தன், அய்யனார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் அய்யனார் தலைமையில் பொதுசெயலாளர் செல்வராஜ், ராஜபாளையம் நகர் காங்கிரஸ் துணைதலைவர் தனசேகரன் முன்னிலையில் ராஜீவ்காந்தி படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் பொதுகுழு உறுப்பினர் குமாரசாமிராஜா, முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் லட்சுமணன், அண்ணாதுரை, ஜ.என்.டி.யு.சி தலைவர் தங்கவேல், விவசாய பிரிவு மாநிலசெயலாளர் மணிகண்டன், செட்டியார் பட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராமர், நாக செல்வம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார காங்கிரஸ் எஸ்.சி துறை தலைவர் கோவிந்தன், அய்யனார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் மலர்கள் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • பின்னர் காங்கிரஸ் தொண்டர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    தூத்துக்குடி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி தபசு மண்டபம் அருகே உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் மலர்கள் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் சந்திரபோஸ், மண்டல தலைவர்கள் சேகர், ஐசன் ,சில்வா, செந்தூர்பாண்டி ,விவசாயிகள் பிரிவு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராகுல், மாவட்ட நிர்வாகிகள் பிரபாகரன், விஜயராஜ், அருணாசலம், தனுஷ், ரஞ்சிதம், ஜெபராஜ், சண்முகசுந்தரம் ,மைக்கில் பிரபாகர், மகாலிங்கம், சீனிவாச ஆசாரி, மெர்லின், மகேந்திரன், ராஜரத்தினம், ஜெயராஜ், சுடலைமுத்து, நாராயணசாமி, தர்மலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் ராஜீவ் காந்தி நினைவு தினம் பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிப்பதால் காங்கிரஸ் தொண்டர்கள் பயங்கரவாத உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    • அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கவி பாண்டியன், உதயகுமார், பரணி இசக்கி, வக்கீல் பிரிவு மாநில இணைத்தலைவர் மகேந்திரன், மாவட்ட பொது செயலாளர் மகேந்திர பாண்டியன், மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் தனசிங்பாண்டியன், மண்டல தலைவர்கள் பிவிடி. ராஜேந்திரன், அய்யப்பன், மாரியப்பன், மாவட்ட துணைத் தலைவர்கள் கே.எஸ். மணிவண்ணை, சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு முழு ஆற்றலோடு செயல்படுவதாக உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    • தேர்தல் பிரச்சாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு குண்டு வைத்து கொல்லப்பட்டார்.
    • ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    டெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 32வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    முன்னதாக ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் மே 21-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தில் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூருக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருவதாக தகவல் வெளியான நிலையில் அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேர்தல் பிரச்சாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு குண்டு வைத்து கொல்லப்பட்டார் என்பது நினைவு கூறத்தக்கது.

    • ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் நினைவிடத்தில் பல்வேறு தலைவர்களும் வந்து அஞ்சலி செலுத்த உள்ளனர்.
    • ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு ராகுல் காந்தி நாளை வருவதாக இருந்தது.

    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் நாளை (மே 21-ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் நினைவிடத்தில் பல்வேறு தலைவர்களும் வந்து அஞ்சலி செலுத்த உள்ளனர்.

    ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை வருவதாக இருந்தது. ஆனால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக இன்று தகவல் வெளியாகி உள்ளது.

    • முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் மே 21ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
    • இதில் பங்கேற்க ராகுல் காந்தி வரும் 21-ம் தேதி தமிழகம் வருகிறார்.

    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் மே 21-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தில் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூருக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

    தேர்தல் பிரச்சாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு விடுதலைப் புலிகளால் குண்டு வைத்து கொல்லப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.

    • ராஜீவ் காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடத்தில், முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78வது பிறந்த நாள் விழா நகர,வட்டார, காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. பல்லடம் பனப்பாளையம் பகுதியில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ் காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    இதில் நகரத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி,நகர செயல் தலைவர் மணிராஜ், நகரப் பொதுச் செயலாளர் கிருஷ்ணகுமார், உள்பட பலர் கலந்து கொண்டனர். பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் பகுதியில், பல்லடம் தெற்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழாவில் வட்டாரத் தலைவர் புண்ணியமூர்த்தி காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.இதேபோல பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகர் பகுதியில் பல்லடம் வடக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்ட ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழாவில் வட்டாரத் தலைவர் கணேசன் காங்கிரஸ் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    1991-ம் ஆண்டு மே மாதத்தில் தமிழ்நாட்டில் தேர்தல் பேரணியின்போது விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட அவரது தந்தை ராஜீவ் காந்தியின் நினைவு நாள் குறித்து ராகுல் காந்தியிடம் கேட்கப்பட்டது.
    கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்வியாளர் டாக்டர் ஸ்ருதி கபிலாவுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உரையாடினார்.

    அப்போது, 1991-ம் ஆண்டு மே மாதத்தில் தமிழ்நாட்டில் தேர்தல் பேரணியின்போது புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட அவரது தந்தை ராஜீவ் காந்தியின் நினைவு நாள் குறித்து ராகுல் காந்தியிடம் கேட்கப்பட்டது.

    இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி கூறியதாவது:-

    எனது வாழ்க்கையின் மிகப்பெரிய கற்றல் அனுபவம் எனது தந்தையின் மரணம். அதைவிட பெரிய அனுபவம் வேறு எதுவும் இல்லை.
    என் தந்தையைக் கொன்ற நபர் அல்லது சக்தியை காணும்போது எனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியது. ஒரு மகனாக நான் என் தந்தையை இழந்தேன். அது மிகவும் வேதனையானது.

    ஆனால் அதே நிகழ்வு, நான் ஒருபோதும் கற்றுக் கொள்ளாத விஷயங்களைக் கற்றுக் கொள்ளச் செய்தது. அதில் இருந்து என்னால் விலகிச் செல்ல முடியாது. எனவே நீங்கள் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும்வரை மக்கள் எவ்வளவு மோசமானவர்கள் அல்லது தீயவர்கள் என்பது முக்கியமல்ல.

     பிரதமர் நரேந்திர மோடி என்னைத் தாக்கினால், கடவுளே அவர் மிகவும் கொடூரமானவர். அவர் என்னைத் தாக்குகிறார் என்று பார்ப்பது ஒரு விதம். மற்றொன்று அதை நன்றாகப் பார்ப்பது. நான் அவரிடமிருந்து ஏதாவது கற்றுக் கொள்ளலாம். இன்னும் கொஞ்சம் கொடுங்கள் என்பேன்.

    வாழ்க்கையில் நீங்கள் எப்பொழுதும், குறிப்பாக பெரிய ஆற்றல்கள் நகரும் இடங்களில் நீங்கள் இருந்தால் எப்போதும் காயப்படுவீர்கள். நான் செய்வதை நீங்கள் செய்தால் நீங்கள் காயமடைவீர்கள். அது சாத்தியமில்லை. ஒரு பெருங்கடல், நீங்கள் கீழே செல்லப் போகிறீர்கள். நீங்கள் கீழே செல்லும்போது அதிலிருந்து எப்படி நடந்துகொள்வது என்பதை நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் வரை பணியில் சேர மாட்டோம் - காஷ்மீர் பண்டிதர்கள்
    ×