செய்திகள்

100 அடி ரெயில்வே பாலத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்ட வேண்டும்: நாராயணசாமியிடம் ஓம்சக்திசேகர் மனு

Published On 2017-06-21 09:12 GMT   |   Update On 2017-06-21 09:12 GMT
புதுவை மாநிலத்தில் 100 அடி சாலையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மேம்பாலத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை வைத்தால் பொருத்தமாக இருக்கும் என முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் ஓம்சக்திசேகர் மனு அளித்தார்.
புதுச்சேரி:

புதுவை முன்னாள் எம்.எல்.ஏ.வும், புரட்சித் தலைவி அம்மா அணி அ.தி.மு.க.வை சேர்ந்த வருமான ஓம்சக்தி சேகர் முதல்-அமைச்சர் நாராயணசாமியை சட்ட மன்றத்தில் அவரது அறையில் சந்தித்து ஒரு மனு அளித்தார்.

பாரதரத்னா எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஓ.பி.எஸ். அணியில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.

புதுவை மாநிலத்தில் 100 அடி சாலையில் ரெயில்வே மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்டு திறப்பு விழா காண உள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மேம்பாலத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரை வைத்தால் பொருத்தமாக இருக்கும்.

இதனை அம்மா அணி சார்பிலும், எம்.ஜி.ஆர். ரசிகர்கள் சார்பிலும் கோரிக்கையாக வைக்கிறோம். ஏற்கனவே அந்த சாலையின் பெயர் எம்.ஜி.ஆர். சாலை என ஆவணங்களில் இருக்கிறது. எனவே, ரெயில்வே பாலத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News