செய்திகள்

கடல் சீற்றம் எதிரொலி: பாம்பனில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Published On 2017-05-29 04:59 GMT   |   Update On 2017-05-29 04:59 GMT
கடல் சீற்றம் காரணமாக பாம்பனில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

ராமேசுவரம்:

வங்காள விரிகுடா கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி கடல் பகுதிகளில் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.

சூறாவளி காற்று வீசுவ தோடு, கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பாம்பனில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று ஏற்றப்பட்டது.

இந்த நிலையில் இன்றும் 2-வது நாளாக கடல் சீற்றமாகவே உள்ளது. இதனால் ராட்சத அலைகள் எழுகின்றன.

எனவே பாதுகாப்பு நடவடிக்கையாக இன்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Tags:    

Similar News