செய்திகள்

சோழவரம் அருகே ஓடும் பஸ்சில் டிரைவர் மாரடைப்பால் மரணம்

Published On 2017-05-16 07:49 GMT   |   Update On 2017-05-16 07:49 GMT
சோழவரம் அருகே ஓடும் பஸ்சில் ஆந்திர மாநில அரசு பஸ் டிரைவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி, தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு நின்றது. இதில் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
செங்குன்றம்:

கோயம்பேட்டில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு நேற்று நள்ளிரவு ஆந்திர மாநில அரசு பஸ் புறப்பட்டது. டிரைவர் குருவையா. பஸ்சை ஓட்டினர். சுமார் 40 பயணிகள் இருந்தனர்.

சோழவந்தானை அடுத்த அழிஞ்சிவாக்கம் அருகே வந்த போது திடீரென டிரைவர் குருவையாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் இருக்கையிலேயே பரிதாபமாக இறந்தார்.

இதற்குள் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது. சாலை தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு எதிர்புறம் இருந்த பஸ் நிறுத்த சுவரை இடித்தபடி நின்றது.

விபத்து நடந்தது நள்ளிரவு நேரம் என்பதால் பெரும்பாலான பயணிகள் தூக்கத்தில் இருந்தனர். பஸ் மோதியதில் பயணிகளுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. இதில் 6 பெண்கள் உள்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

சோழவரம் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பஸ் நிலையத்துக்குள் பஸ் புகுந்த போது அங்கு யாரும் இல்லை. இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

Tags:    

Similar News