செய்திகள்

நாட்டறம்பள்ளியில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க தலைவர் கைது

Published On 2017-02-24 14:38 GMT   |   Update On 2017-02-24 14:38 GMT
நாட்டறம்பள்ளியில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க தலைவரை போலீசார் கையும் களவமாக பிடித்து கைது செய்தனர்.

வேலூர்:

நாட்டறம்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவன் (வயது 59). அ.தி.மு.க.வில் ஒன்றிய இலக்கிய அணி செயலாளராகவும் கட்சி பொறுப்பு வகிக்கிறார்.

இந்த நிலையில், நாட்டறம்பள்ளி அடுத்த ஜங்கலாபுரம் சேர்ந்த விவசாயி சிவா என்பவர், பயிர் மானியக்கடன் கேட்டு கூட்டுறவு சங்கத்தில் விண்ணப்பித்தார். இதற்காக, கூட்டுறவு சங்க தலைவரின் பரிந்துரை தேவைப்பட்டது.

இளங்கோவை, விவசாயி சிவா அணுகினார். அப்போது அவர், பயிர் கடனுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத சிவா, வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் நோட்டுகளை போலீசார் சிவாவிடம் கொடுத்து அனுப்பினர்.

அந்த பணத்தை சிவா, கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவனிடம் இன்று கொடுத்தார்.

லஞ்சம் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மற்றும் போலீசார் இளங்கோவனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Similar News