செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 57 அடியாக குறைந்தது

Published On 2016-10-22 05:10 GMT   |   Update On 2016-10-22 05:10 GMT
மேட்டூர் அணைக்கு நேற்று 484 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் குறைந்து 318 கன அடியாக சரிந்தது. நேற்று 58.78 கன அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 57.37 கன அடியானது.
மேட்டூர்:

காவிரி டெல்டா பாசனத்திற்காக இந்தாண்டு வழக்கத்தை விட 3 மாதம் தாமதமாக கடந்த மாதம் 20-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அப்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 87.68 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரத்து 68 கன அடியாகவும் இருந்தது.

இதற்கிடையே கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விட்ட தண்ணீரை படிப்படியாக கர்நாடக அரசு குறைத்து முற்றிலும் நிறுத்தியது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் சரிந்ததால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று 484 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் குறைந்து 318 கன அடியாக சரிந்தது. நேற்று 58.78 கன அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 57.37 கன அடியானது.

அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்துள்ள நிலையில் அணையில் இருந்து 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஒரு நாளைக்கு ஒன்றரை அடிக்கும் மேல் வேகமாக நீர்மட்டம் சரிந்து வருகிறது. இதனால் இனி வரும் காலங்களில் மழை பெய்தால் மட்டுமே மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் நாட்கள் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.

Similar News