செய்திகள்
கபில் தேவ்-விராட் கோலி

பேட்டிங்கில் தடுமாறும் விராட் கோலி: கேப்டன் பதவியின் அழுத்தம் காரணமா?- கபில் தேவ் கருத்து

Published On 2021-09-16 09:08 GMT   |   Update On 2021-09-16 12:44 GMT
கடந்த இரண்டு ஆண்டுகளாக கோலி, சதம் விளாச முடியாமல் திணறி வருகிறார். இந்திய அணிக்கு கேப்டனாக செயல்படுவது தான் கோலியின் பேட்டிங்கை பாதிக்கிறது என்று பலர் கூறி வருகின்றனர்.
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம், சமீப காலமாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சிறப்பாக இருக்கவில்லை. இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோலி, சதம் விளாச முடியாமல் திணறி வருகிறார். இந்திய அணிக்கு கேப்டனாக செயல்படுவது தான் கோலியின் பேட்டிங்கை பாதிக்கிறது என்று பலர் கூறி வருகின்றனர்.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், 'விராட் கோலி, கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து ரன்கள் குவித்து வந்தார். அவர் நன்றாக விளையாடும் போதெல்லாம் இதைப் போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படவில்லை. ஆனால், இப்போது அவரது பேட்டிங்கில் சற்றுத் தடுமாற்றம் காணப்பட்டவுடன் கருத்து சொல்ல வந்துவிடுகிறார்கள்.

விராட் கோலி இப்போது மிகவும் ஆற்றல்மிக்க அனுபவமிக்க கிரிக்கெட் வீரராக இருக்கிறார். அவர் விரைவில் சதம், இரட்டை சதமல்ல... 300 ரன்கள் கூட குவிப்பார்' என்று ஆதரவாக பேசியுள்ளார்.
Tags:    

Similar News