செய்திகள்
தவான் - விராட் கோலி

20 ஓவர் தர வரிசை - கோலி, தவான் முன்னேற்றம்

Published On 2019-09-26 05:03 GMT   |   Update On 2019-09-26 05:03 GMT
20 ஓவர் போட்டிக்கான பேட்டிங் தர வரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்ட நிலையில் இந்திய கேப்டன் கோலி, தவான் முன்னேற்றம் அடைந்து உள்ளனர்.
துபாய்:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 20 ஓவர் போட்டிக்கான வீரர்கள் தர வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

பேட்டிங் வரிசையில் கேப்டன் கோலி, தவான் முன்னேற்றம் அடைந்து உள்ளனர்.

ரோகித்சர்மா இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹால்சுடன் இணைந்து 8-வது இடத்தில் உள்ளார். இருவரும் தலா 664 புள்ளிகள் பெற்றுள்ளனர். தவான் 3 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தில் உள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் 72 ரன் எடுத்த இந்திய அணி கேப்டன் விராட்கோலி 12-வது இடத்தில் இருந்து 11-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். லோகேஷ் ராகுல் 10-வது இடத்துக்கு பின் தங்கினார்.

பாபர் ஆசம் (பாகிஸ்தான்) முதல் இடத்திலும், மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) 2-வது இடத்திலும் காலின் முன்ரோ (நியூசிலாந்து) 3-வது இடத்திலும் உள்ளார்.

பந்து வீச்சாளர்களில் ‘டாப் 10’ல் இந்திய வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை. குல்தீப்யாதவ் 632 புள்ளிகள் பெற்று 14-வது இடத்தில் உள்ளார்.

ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத்கான் 757 புள்ளியுடன் முதல் இடத்தில் உள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த இமாத்வாசிம், சதாப்கான் 2-வது மற்றும் 3-வது இடங்களில் உள்ளனர்.

ஆல் ரவுண்டர் தர வரிசையில் மேக்ஸ்வெல் 390 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். சகீப்- அல்ஹசன் (வங்காள தேசம்), 2-வது இடத்திலும், முகமது நபி (ஆப்கானிஸ்தான்) 3-வது இடத்திலும் உள்ளனர்.
Tags:    

Similar News