செய்திகள்
டோனி - ரிஷப் பந்த்

டோனியின் இடத்தை நிரப்புவது கடினம்:- ரிஷப் பந்த்

Published On 2019-07-26 14:51 GMT   |   Update On 2019-07-26 14:51 GMT
இந்திய கிரிக்கெட்டில் டோனியின் இடத்தை நிரப்புவது மிகவும் கடினமான செயல் என ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததில் இருந்தே, அனுபவ வீரரான டோனி கடுமையாக விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார். குறிப்பாக, அவரது ஓய்வு குறித்து பலரும் பேசி வந்தனர். 

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் டோனி பங்கேற்கமாட்டார் எனவும் அவர் அடுத்த 2 மாதம் ராணுவத்தில் பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது டோனி ஜம்மு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்.

இந்நிலையில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மனுமான ரிஷப் பந்த் இடம் டோனி கூறித்து கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. அப்போது பேசிய பந்த் கூறியதாவது:-

கிரிக்கெட் விளையாட்டை டோனியை போன்று யாராலும் சிறப்பாக கையாளமுடியாது. மேலும், அவர் போட்டியின் இக்கட்டான சூழ்நிலையிலும் மிகவும் அமைதியாகவும், முடிவெடுப்பதில் மிகுந்த திறமை கொண்டவராகவும் இருக்கிறார். ஆகையால் இந்திய கிரிக்கெட்டில் டோனியின்  இடத்தை நிரப்புவது என்பது மிகவும் கடினமான ஒன்று. 

ஆனால் தற்போது எனக்கு டோனியின் இடத்தை நிரப்புவது பற்றி எந்த வித எண்ணமும் இல்லை. எனது பேட்டிங் மற்றும் கீப்பிங் திறமைகளை வளர்ப்பதிலேயே மிகுந்த கவனம் செலுத்தி வருகிறேன். மேலும் மேற்கிந்திய தொடரில் எனது முழு திறமையையும் வெளிபடுத்தி அணியின் வெற்றிக்காக பாடுபடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News