search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரிஷப் பந்த்"

    நான் காயத்தில் இருக்கும்போது ரிஷப் பந்த் எனது இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார் என்று விருத்திமான் சகா தெரிவித்துள்ளார். #Saha
    டோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும் கொல்கத்தாவைச் சேர்ந்த விருத்திமான் சகா விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தார். சிறப்பாக விக்கெட் கீப்பர் பணியை செய்ததுடன் ரன்களும் குவித்தார். இதனால் நீண்ட நாட்களாக சகா டெஸ்ட் அணியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் தென்ஆப்பிரிக்கா தொடரின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் இங்கிலாந்து தொடரின்போது தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். ஆனால், இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் ரிஷப் பந்த் அணியில் இடம்பிடித்தார்.

    தனக்கு கிடைத்த வாய்ப்பை ரிஷப் பந்த் கெட்டியாக பிடித்துக் கொண்டார். இதற்கிடையே தோள்பட்டை காயத்தால் சுமார் 8 மாதமாக சகாவால் விளையாட முடியாமல் போனது. தற்போது காயம் குணமடைந்து இந்தியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட்டான சையத் முஸ்தாக் அலி தொடரில் விளையாட இருக்கிறார்.

    எனது இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்ட ரிஷப் பந்த்-ஐ நான் போட்டியாளராக கருதவில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து சகா கூறுகையில் ‘‘நான் காயத்தால் விளையாடாமல் இருந்த நிலையில் என்னுடைய இடத்தை ரிஷப் பந்த் கெட்டியாக பிடித்துக் கொண்டார். யாராக இருந்தாலும் அவர்களது வாய்ப்பை கெட்டியாக பிடிக்க நினைப்பார்கள். அதைத்தான் ரிஷப் பந்த் செய்துள்ளார்.

    நான் ரிஷப் பந்த்-ஐ போட்டியாளராக கருதவில்லை. நான் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றிருந்த போது ரிஷப் பந்த் உடன் நீண்ட நேரம் உரையாடினேன். அப்போது நாங்கள் ஆட்டத்திறன் மற்றும் தேர்வு குறித்து பேசினோம்’’ என்றார்.
    விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் இந்திய அணிக்கான அற்புதமான கண்டுபிடிப்பு என்று இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்ககரா தெரிவித்துள்ளார். #RisshabhPant
    இந்திய அணியின் தலைசிறந்த வீரரான எம்எஸ் டோனி கடந்த 2004-ல் இருந்து சர்வதேச போட்டியில் விளையாடி வருகிறார். 37 வயதாகும் டோனி உலகக்கோப்பை தொடரோடு ஓய்வு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு எம்எஸ் டோனிக்கு மிகவும் சிறப்பானதாக இல்லை. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் பெரிய அளவில் ரன்கள் அடிக்கவில்லை. இதனால் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவர் இடம் பெற வேண்டுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இந்த வருடம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் அனைத்து போட்டியிலும் அரைசதம் அடித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

    டோனியின் ஆட்டத்திறன் குறைந்து வரும் நிலையில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் அவரது இடத்தை பிடிக்க தீவிரமாக உள்ளனர். இந்நிலையில் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் டோனி இருக்க வேண்டும், ரிஷப் பந்த் இந்தியாவிற்கான அற்புதமான கண்டுபிடிப்பு என இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்ககரா தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து குமார் சங்ககரா கூறுகையில் ‘‘ரிஷப் பந்த் இந்தியாவிற்கான அற்புதமான கண்டுபிடிப்பு. இளம் வீரராக இருந்தாலும், அல்லது வயது மூத்த வீரராக இருந்தாலும் அவர்களது இடத்திற்காக போட்டியிடுவது சிறந்தது. அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதுதான் முக்கியது. அதை வாய்ப்பு அல்லது மிரட்டல் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

    உலகக்கோப்பை என்று வரும்போது அனுபவ வீரர்கள் அதிக அளவில் இருப்பார்கள். உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் டோனிக்கு கட்டாயம் இடமிருக்கும். இக்கட்டான நிலையில் விராட் கோலி டோனியுடன் அனுபவத்தை பயன்படுத்தி சிறப்பாக செயல்பட முடியும்’’ என்றார்.
    உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிஷப் பந்த்துக்கு கட்டாயம் இடமுண்டு என்று தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் உறுதியாக தெரிவித்துள்ளார். #RishabhPant
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் விக்கெட் கீப்பர் ரிசப் பந்த் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிட்னி டெஸ்டில் ஆட்டமிழக்காமல் 159 ரன்கள் குவித்து, தொடரில் புஜாராவிற்கு அடுத்தபடி அதிக ரன்கள் குவித்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான அணியில் அவர் இடம் பெறவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்திது.

    இது தொடர்பாக தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியதாவது:-

    சாம்பியன் கிரிக்கெட் வீரராக உருவாகி வரும் ரிசப் பந்த் ஆஸ்திரேலியாவில் மூன்று 20 ஓவர் ஆட்டம், 4 டெஸ்டில் தொடர்ந்து ஆடினார். தற்போது அவருக்கு 2 வாரங்கள் ஒய்வு தேவை. இதனால்தான் ஒருநாள் தொடரில் அவரை சேர்க்கவில்லை. எதிர்கால நட்சத்திர வீரராக உள்ள ரிசப் பந்த் தொடர்பாக தேர்வுக்குழு கவனத்துடன் செயல்படுகிறது. 2019 உலகக்கோப்பை அணியின் செயல் திட்டத்தில் அவர் இடம் பெற்றுள்ளார்.

    கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதை ரிசப் பந்த் கடைபிடித்து வருகிறார்.  இங்கிலாந்தில் அவர் கேட்ச்களை பிடித்து தனது திறமைகளை வெளிப்படுத்தி இருந்தார்.

    இளம் வீரர் ஷுப்மான் கில் சர்வதேச போட்டிக்கு தயாரானது மகிழ்ச்சி அளிக்கிறது. விகாரி, அகர்வால், பிரித்வி ஷா, கலீல் அகமது ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2 டெஸ்டில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அப்படி செய்யாவிட்டால் ஆஸ்திரேலியா டெஸ்டில் அவர் ஆடி இருக்க முடியாது. 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் முகமது ‌ஷமிக்கு அவரது உடல் தகுதி சாதகமான அம்சமாகும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    தற்போது தனக்கு ‘பேபி சிட்டர்’ தேவை என்று ரிஷப் பந்தை நகைச்சுவைக்காக கிண்டல் செய்துள்ளார் இந்திய ஒருநாள் அணியின் துணைக் கேப்டன் ரோகித் சர்மா #RohitSharma #RishabhPant
    இளம் வீரரான ரிஷப் பந்த் இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். மெல்போர்ன் டெஸ்டின்போது ரிஷப் பந்து பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டிம் பெய்ன் ‘‘ரிஷப் பந்த் பேட்டிங் செய்யும்போது ‘‘ஒரு நாள் போட்டிக்கு டோனி வந்து விட்டார். நாம் இவரை (ரிஷப் பந்த்) ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எடுத்துக் கொள்ளலாம். அந்த அணிக்கு பேட்ஸ்மேன் தேவை. அதனால் ஆஸ்திரேலியாவில் இருப்பதை கொஞ்ச நாள் நீட்டித்துக்கொள்.

    ஹோபர்ட் அழகான நகரம். தங்குவதற்கு ஒரு சொகுசு குடியிருப்பை அவருக்கு வழங்கிவிடலாம்.... அப்புறம்... நான் என் மனைவியை சினிமாவுக்கு அழைத்து செல்லும்போது, நீதான் என் குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டும். சரியா...’’ என்று கூறி கேலி செய்தார்.

    பின்னர் புத்தாண்டையொட்டு ஆஸ்திரேலிய பிரதமர் இருஅணி வீரர்களுக்கும் விருந்து அளித்தார். அப்போது டிம் பெய்ன் தனது மனைவி குழந்தைகளுடன் வந்திருந்தார். அப்போது ரிஷப் பந்த் டிம் பெய்னின் குழந்தைகளை எடுத்து கொஞ்சினார். இந்த போட்டோவை வெளியிட்ட டிம் பெய்னின் மனைவி, ‘‘ரிஷப் பந்த் சிறந்த பேபி சிட்டர்’’ என்று கூறியிருந்தார்.

    இதற்கிடையே இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணைகேப்டனும், அதிரடி வீரரும் ஆன ரோகித் சர்மாவிற்கு கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்தது. ரோகித் சர்மா - ரித்திகா தம்பதி தங்களது குழந்தைக்கு ‘சமைரா’ என்று பெயரிட்டுள்ளனர்.

    தற்போது ரோகித் சர்மா ஒருநாள் தொடர் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அவர் நகைச்சுவைக்காக ரிஷப் பந்தை டுவிட்டரில் கிண்டல் செய்துள்ளார். ரோகித் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘நீங்கள் சிறந்த பேபி சிட்டர் என்று கேள்விப்பட்டேன். இப்போது தனக்கு பேபி சிட்டர் தேவை. ரித்திகா மிகவும் சந்தோசம் அடைவார்’’ என்று பதிவிட்டார்.

    இதற்கு ரிஷப் பந்த் ‘‘சாஹல் அவரது வேலையை சரியாக பார்க்கவில்லையா? ரோகித் சர்மாவின் மகளுக்கு பேபி சிட்டராக இருப்பது மிகவும் மகிழ்ச்சி’’ என்று பதிவிட்டுள்ளார்.
    உலகக் கோப்பைக்கான இந்திய அணி திட்டத்தில் ரிஷப் பந்த் இருப்பார் என்று தேசிய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். #BCCI #RishabhPant
    இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த். இங்கிலாந்து தொடரின்போது தினேஷ் கார்த்திக் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 3-வது டெஸ்ட் போட்டியில் நீக்கப்பட்டார். ரிஷப் பந்த் அறிமுகம் ஆனார். அறிமுக டெஸ்டில் 24, 1 ரன் அடித்தார். 4-வது டெஸ்டில் 0, 18 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி டெஸ்டின் முதல் இன்னிங்சில் 5 ரன்னில் வெளியேறிய ரிஷப் பந்த், 2-வது இன்னிங்சில் 114 ரன்கள் குவித்தார். இதனால் ரிஷப் பந்த் மீது அனைவருடைய பார்வையும் திரும்பியது.

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தலா 92 ரன்கள் குவித்து அசத்தினார். அதன்பின் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் களம் இறங்கவில்லை. 2-வது போட்டியில் 17 ரன்களும், 3-வது ஆட்டத்தில் 24 ரன்களும் சேர்த்ததால் கடைசி இரண்டு போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.

    டி20 தொடரில் முறையே 1, 5, 58 என ரன்கள் சேர்த்தார். ஆனால் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக பணியாற்றினார். ரிஷப் பந்த் சிறப்பு பேட்ஸ்மேனாக களம் இறங்கினார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் இவரது பேட்டிங் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மேலும் டோனி டி20 போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்காதது விமர்சனத்தை எழுப்பியது.

    இதனால் ஆஸ்திரேலியா தொடருக்கான டி20 அணியில் இடம் பிடித்த ரிஷப் பந்திற்கு ஒருநாள் தொடரில் இடம் கிடைக்கவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டி20 தொடரில் விக்கெட் கீப்பராக பணியாற்றிய ரிஷப் பந்த் முதல் ஆட்டத்தில் 20 ரன்கள் சேர்த்தார். 3-வது ஆட்டத்தில் டக்அவுட் ஆனார். 2-வது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

    மேலும், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒற்றையிலக்க ரன்களில் ஆட்டமிழக்காவிடிலும் 25, 30 என ஓரளவிற்கு ரன்கள் சேர்த்தார். இதனால் ரிஷப் பந்த்-ஐ ஏன் அணியில் சேர்த்தார்கள் என்ற விமர்சனம் எழும்பியது.



    இந்நிலையில்தான் சிட்னி டெஸ்டில் வீறுகொண்டு எழுந்த ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 159 ரன்கள் விளாசினார். இவரது அதிரடி ஆட்டத்தில் இந்தியா 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 300 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. கடந்த 30 வருடத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் பாலோ-ஆன் ஆக முக்கிய காரணமாக இருந்தார். மேலும், 20 கேட்ச்கள் பிடித்து அசத்தினார். இதனால் ஒருநாள் போட்டியில் ரிஷப் பந்த்-ஐ ஏன் சேர்த்திருக்கக்கூடாது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

    இந்நிலையில் உலகக் கோப்பைக்கான இந்திய அணி திட்டத்தில் ரிஷப் பந்திற்கு கட்டாயம் இடமுண்டு என்று தேசிய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘உலகக் கோப்பைக்கான விக்கெட் கீப்பர்களில் ஒருவராக ரிஷப் பந்த் இருப்பார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. விக்கெட் கீப்பர்களை தேர்வு செய்யும் வேலைகள் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. உலகக் கோப்பை திட்டத்தில் ரிஷப் பந்த் ஒரு பகுதியாக இருப்பார்.

    வீரர்களின் வேலைப்பளு விவகாரத்தில்தான் ரிஷப் பந்த் ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை. தற்போது எத்தனை வீரர்கள் ஓய்வில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கலாம். ரிஷப் பந்த் டி20 போட்டியில் விளையாடியுள்ளார். அதன்பின் முக்கியத்துவம் வாய்ந்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். உடல் ஏற்கனவே சோர்வடைந்திருக்கும். சிறு உபாதை உள்ளது. அதில் குணமடைய வேண்டும். அவர் அதிக வலிமையுடன் அணிக்கு திரும்புவார்.

    இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் சதம் அடித்த ஒரே விக்கெட் கீப்பர் ரிஷப் பந்துதான். அவருக்கு நாங்கள் சில இலக்கு நிர்ணயம் செய்தோம். நாங்கள் அவருக்கு நிர்ணயம் செய்ததை அவர் நிறைவேற்றிவிட்டார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் சிட்னி டெஸ்ட் மிகப்பெரிய திருப்பு முனையாக இருக்கும்’’ என்றார்.
    ×