search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிஷப் பந்த் அதிரடிக்கு மதிப்பளிப்போம்: அவர் மீது மட்டுமே எங்களது கவனம் இருக்காது- சிஎஸ்கே பயிற்சியாளர்
    X

    ரிஷப் பந்த் அதிரடிக்கு மதிப்பளிப்போம்: அவர் மீது மட்டுமே எங்களது கவனம் இருக்காது- சிஎஸ்கே பயிற்சியாளர்

    ரிஷப் பந்த் அதிரடிக்கு மதிப்பளிக்கும் நேரத்தில், அவர் மீது மட்டுமே எங்களது கவனம் இருக்காது என்று சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் பிளெமிங் தெரிவித்துள்ளார். #DDvCSK
    ஐபிஎல் 2019 சீசன் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 213 ரன்கள் குவித்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 27 பந்தில் 78 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரி, 7 சிக்ஸ் அடங்கும். இவரது ஆட்டத்தை கிரிக்கெட் விமர்சகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொண்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் எளிதில் வெற்றி பெற்றது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 2-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் ரிஷப் பந்த் சிஎஸ்கே அணிக்கு கடும் அச்சுறுத்தலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் ரிஷப் பந்த் ஆட்டத்திற்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். ஆனால், அவர் மீது மட்டுமே கவனம் இருக்காது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில் ‘‘நாங்கள் இந்தத் தொடரில் ஏராளமான வீரர்களுக்கு மதிப்பளிக்கிறோம். இதில் ரிஷப் பந்தும் ஒருவர். ஆனால் டெல்லி அணியில் மற்ற வீரர்களும் உள்ளனர். இந்திய அணியில் இடம்பிடிக்கும் இளம் வீரர்களில் ஒருவராக ரிஷப் பந்த் இருக்கிறார்.



    டெல்லி அணியில் ஷிகர் தவான், கொலின் இங்கிராம், ஷ்ரேயாஸ் அய்யர் போன்றோரும் உள்ளனர். அவர்களின் தவறுகளை கண்டுபிடித்து, அதை சிறப்பாக பயன்படுத்த வேண்டும். நாங்கள் எங்களுடைய சொந்த பலத்தின் மீது கவனம் செலுத்துவோம்’’ என்றார்.
    Next Story
    ×