செய்திகள்
அப்துல் காதிர் மிக்கி ஆர்தர்

பாகிஸ்தான் கிரிக்கெட்டை மிக்கி ஆர்தர் சீரழித்துவிட்டார்: அப்துல் காதிர் குற்றச்சாட்டு

Published On 2019-07-18 12:35 GMT   |   Update On 2019-07-18 12:35 GMT
தலைமை பயிற்சியாளரான மிக்கி ஆர்தர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சீரழித்துவிட்டார் என்று அப்துல் காதிர் குற்றச்சாட்டியுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. பாகிஸ்தான் தொடக்கத்தில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ரன்ரேட் விகிதத்தில் 5-வது இடம் பிடித்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

இந்நிலையில் உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடி வரும் உமர் அக்மர், அகமது ஷேசாத் போன்ற வீரர்களை புறக்கணித்ததன் மூலம் மிக்கி ஆர்தர் பாகிஸ்தான் கிரிக்கெட்டை சீரழித்துவிட்டார் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் அப்துல் காதிர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அப்துல் காதிர் கூறுகையில் ‘‘மிக்கி ஆர்தர் பாகிஸ்தான் கிரிக்கெட்டை சீரழித்துவிட்டார். அவர் அகமது ஷேசாத், சமி அஸ்லாம், சல்மான் பட், உமர் அக்மல், சோஹைல் கான் ஆகிய இவர்களுடன் மேலும் பல வீரர்களை இவர் புறந்தள்ளிவிட்டார். இவர்களின் அனுபவம் மற்றும் ஆட்டத்திறனால் பாகிஸ்தான் அணியை முன்னோக்கி எடுத்துச் சென்றிருக்க முடியும்.



இந்த வீரர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை பிரச்சனை இருந்தாலும் கூட, அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பொறுப்பேற்று வருங்காலத்தில் சிக்கலில் சிக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உலகக்கோப்பை தொடருடன் மிக்கி ஆர்தரின் தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News