செய்திகள்

இங்கிலாந்து ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்: சச்சின் தெண்டுல்கர்

Published On 2019-05-02 11:35 GMT   |   Update On 2019-05-02 11:35 GMT
உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து ஆடுகளங்கள் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும் என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார். #WorldCup2019 #ICCWorldCup
ஐசிசி-யின் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி தொடங்கி ஜூலை மாதம் 14-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த சில வருடங்களாக ஒருநாள் போட்டிக்கான ஆடுகளத்தை மிகவும் ‘பிளாட்’டாக தயார் செய்து வருகிறது. இதனால் 350 ரன்கள் எளிதாக சேர்க்கப்பட்டது.

இங்கிலாந்தில் போட்டி நடக்கக்கூடிய காலம் கோடைக்காலம் என்பதால், ஆடுகளத்தில் ஈரப்பதம் இருக்காது. அதேபோல் ஈரக்காற்றும் வீசாது. இதனால் பந்து ஸ்விங் ஆகாது என்பதால் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரும் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.



உலகக்கோப்பைக்கான ஆடுகளம் குறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘இங்கிலாந்தில் கோடைக்காலம் என்பதால் இதை நான் சொல்கிறேன். 2017-ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கூட, நன்றாக வெயில் அடிக்கும்போது ஆடுகளம் பேட்டிங்கிக்கு சாதகமாக இருந்தது. வெப்பமான நேரத்தில் ஆடுகளம் மிகவும் பிளாட்டாக இருக்கும். ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கப் போகிறது என்பதை நான் உறுதியாக கூறுவேன்.

அதிகமான மேக சூழ்ந்திருக்கும் நிலையைத் தவிர மற்ற நேரங்களில் ஆடுகளம் பந்து வீச்சு சாதமாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. மேகமூட்டாக இருந்தால், பந்து சற்று ஸ்விங் ஆகும். இருந்தாலும் ஸ்விங் தாக்கம் நீண்ட நேரம் இருக்க வாய்ப்பு இல்லை.’’ என்றார்.
Tags:    

Similar News