செய்திகள்

2-வது டி20 கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

Published On 2019-03-07 09:56 GMT   |   Update On 2019-03-07 09:56 GMT
2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்திடம் இந்திய பெண்கள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை இழந்தது. #INDWvENGW
கவுகாத்தி:

இந்தியா மற்றும் இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து 2-வது டி20 போட்டி இன்று கவுகாத்தி நகரில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இந்திய வீராங்கனைகள் முதலில் பேட்டிங் செய்தனர். முன்னணி வீரர்களான ஸ்மிரிதி மந்தனா (12), ரோட்ரிக்ஸ் (2), மிதலி ராஜ் (20) சொற்ப ரன்களில் ஆட்டமிக்க, இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இதனால் இங்கிலாந்து அணிக்கு 112 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எளிதான இலக்கை சேஸிங் செய்ய இங்கிலாந்து வீராங்கனைகள் களம் இறங்கினர். தொடக்க வீராங்கனை வியாட் நிலைத்து நின்று விளையாடினார். மற்ற வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

என்றாலும் வியாட் 55 பந்தில் 6 பவுண்டரியுடன் 64 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க இங்கிலாந்து 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள்  கொண்ட தொடரை 2-0 எனக்கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.
Tags:    

Similar News