செய்திகள்

ஊழல் தடுப்பு விதிமுறையை மீறியதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு 10 ஆண்டு தடை: ஐசிசி

Published On 2019-02-20 10:18 GMT   |   Update On 2019-02-20 10:18 GMT
ஊழல் தடுப்பு விதிமுறையை மீறியதாக அரபு எமிரேட்ஸ் அதிகாரிக்கு ஐசிசி 10 ஆண்டுகள் தடைவிதித்துள்ளது. #ICC #UAE
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பல்வேறு வயதிற்கேற்ப கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்தவர் அன்சாரி. கடந்த 2017-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாகிஸ்தான் - இலங்கை இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அப்போது போட்டி குறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமதிடம் சில தகவல்களை பெறுவதற்காக பேச்சு கொடுத்தார்.

சர்பிராஸ் அகமது உடனடியாக இதுகுறித்து ஐசிசி-யின் ஊழல் தடுப்பு குழுவிற்கு தகவல் கொடுக்கார். இந்த சம்பவம் குறித்து தீர்ப்பாயம் விசாரணை நடத்தி வந்தது. விசாரணையில் அன்சாரி தவறு செய்தது உறுதியானது. இதனால் அவருக்கு ஐசிசி 10 வருடம் தடைவிதித்துள்ளது.
Tags:    

Similar News