செய்திகள்

சூதாட்டத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்- ஒரே மாதத்தில் 3 பேரை சஸ்பெண்ட் செய்தது ஐசிசி

Published On 2018-11-14 08:22 GMT   |   Update On 2018-11-14 08:22 GMT
இலங்கை முன்னாள் வீரர் தில்கரா லோகுதிகே சூதாட்ட புகாரில் நீக்கப்பட்டதன் மூலம் ஒரே மாதத்தில் 3 வீரர்களை ஐசிசி சஸ்பெண்ட் செய்துள்ளது. #ICC #DilharaLokuhettige
கொழும்பு:

இலங்கை கிரிக்கெட் அணி சூதாட்ட பிரச்சினையில் சிக்கி தவிக்கிறது.

அந்நாட்டின் முன்னாள் அதிரடி வீரரும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான ஜெயசூர்யா மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஊழல் புகாரை கூறி இருந்தது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து கடந்த 31-ந்தேதி இலங்கை முன்னாள் வேகப்பந்து வீரரும், அணியின் பந்துவீச்சு பயிற்சியாளருமான நுவன் சொய்சா சிக்கினார். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்த நிலையில் இலங்கை முன்னாள் வீரர் தில்கரா லோகுதிகே மீதும் மேட்ச் பிக்சிங் புகார் கூறப்பட்டு அவரை ஐ.சி.சி. சஸ்பெண்டு செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் 10 ஓவர் ‘லீக்’ போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் ஆல்ரவுண்டரான தில்கரா சூதாட்டத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக ஐ.சி.சி. ஊழல் தடுப்புக்குழு விசாரித்தது.

ஆட்டத்தின் போக்கை மாற்றி முடிவை நிர்ணயம் செய்தல், வீரர்களை நேரடியாக தொடர்பு கொண்டு விதிமீறலில் ஈடுபட வலியுறுத்தியது போன்ற புகார்கள் அடிப்படையில் அவரை சஸ்பெண்டு செய்து உள்ளது.

ஆட்டத்தில் விளையாடாமலேயே தில்கரா முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த சூதாட்ட குற்றச்சாட்டு குறித்து அவர் 14 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க ஐ.சி.சி. அவகாசம் வழங்கி உள்ளது.

38 வயதான தில்கரா 9 ஒருநாள் ஆட்டம் மற்றும் இரண்டு 20 ஓவர் சர்வதேச போட்டியில் விளையாடி இருக்கிறார். #ICC #DilharaLokuhettige
Tags:    

Similar News