செய்திகள்

ராஜ்கோட்டில் அடித்த 649 ரன்களே வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இந்தியாவின் அதிக பட்ச ஸ்கோர்

Published On 2018-10-06 08:27 GMT   |   Update On 2018-10-06 08:27 GMT
ராஜ்கோட்டில் இந்தியா 649 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்ததே வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒரு இன்னிங்சில் அடித்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும். #INDvWI
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.



பிரித்வி ஷா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோரின் சதத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.



வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 1979-ம் ஆண்டு கான்பூர் மைதானத்தில் 7 விக்கெட் இழப்புக்கு 644 ரன் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது. ஒட்டு மொத்தத்தில் இந்தியாவின் 7-வது அதிகபட்ச ஸ்கோராகும்.
Tags:    

Similar News