என் மலர்

  நீங்கள் தேடியது "INDvWI"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முதலில் ஆடிய இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது.
  • அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

  லாடர்ஹில்:

  இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 4வது டி20 கிரிக்கெட் போட்டி லாடர்ஹில் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு தேர்வு செய்தது.

  முதலில் பேட்டிங் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் சேர்த்தது. ரிஷப் பண்ட் 44 ரன்னும், கேப்டன் ரோகித் சர்மா 33 ரன்னும், சஞ்சு சாம்சன் 30 ரன்னும் எடுத்தனர்.

  அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19.1 ஓவரில் 132 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் பூரன் மற்றும் பாவல் ஆகியோர் அதிகபட்சமாக 24 ரன்கள் எடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 தொடரை 3-1 என கைப்பற்றியுள்ளது.

  இந்நிலையில், நேற்றைய போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா 33 ரன்கள் எடுத்திருந்தபோது சர்வதேச அரங்கில் 16,000 ரன்களைக் கடந்த 7வது இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.

  அவர் டெஸ்டில் 3,137 ரன்னும், ஒருநாள் போட்டியில் 9,376 ரன்னும், டி20 போட்டியில் 3,487 ரன்னும் எடுத்துள்ளார்.

  சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், விராட் கோலி, வீரேந்திர சேவாக் மற்றும் எம்,எஸ்,டோனி ஆகியோர் 16,000 ரன்களை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஜடேஜா ஒருநாள் போட்டித் தொடரில் இருந்து விலக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
  • ஒருநாள் தொடருக்குப் பிறகு ஜூலை 29-ம் தேதி தொடங்கும் டி20 தொடரில் ஜடேஜா விளையாடலாம்.

  வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. முக்கிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்திய அணி ஷிகர் தவான் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. துணைக் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார்.

  இன்று முதல் ஒருநாள் போட்டி நடக்கவுள்ள நிலையில் ஜடேஜா காயம் காரணமாக விலகி உள்ளார். இடது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. ஜடேஜா முதல் ஒருநாள் போட்டி மட்டுமின்றி ஒருநாள் தொடரில் இருந்து விலக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

  ஜடேஜா மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். அவரது காயம் எவ்வளவு தீவிரமானது என்பதை மருத்துவர்கள் முடிவு செய்வார்கள்.

  ஒருநாள் தொடருக்குப் பிறகு ஜூலை 29-ம் தேதி தொடங்கும் டி20 தொடரில் ஜடேஜா விளையாடலாம். இருப்பினும் மருத்துவக் குழு ஜடேஜா குறித்த அறிக்கையை அளிக்கும் போது மட்டுமே அது குறித்து கூற முடியும்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்திரேலியா தொடர் தொடங்கும் நிலையில் ஷிகர் தவான் பார்முக்கு திரும்பியது மிகவும் முக்கியமானது என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். #INDvWI
  இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஆன ஷிகர் தவான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக விளையாடவில்லை. ஒருநாள் போட்டியில் மிகப்பெரிய அளவில் ரன் குவிக்க திணறினார். அதேபோல் டி20 போட்டியிலும் திணறி வந்தார். நேற்று சென்னையில் நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடி 62 பந்தில் 92 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

  இந்தியா அடுத்து ஆஸ்திரேலியா சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டிக்கு முன் தவான் மீண்டும் பார்முக்கு வந்தது முக்கியமானது என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘அணியின் கண்ணோட்டத்தில் முக்கியமான ஆஸ்திரேலியா தொடருக்கு முன் வீரர்கள் சிறப்பாக விளையாடி ரன்கள் குவிப்பது முக்கியமானது. ஒருநாள் போட்டியில் சிறப்பாக போட்டிங் செய்தாலும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. முக்கியமான தொடருக்கு முன் அணியின் வெற்றிக்கு உதவும் வகையில் அதிக ரன்கள் குவித்ததால் நான் மகிழ்ச்சியடைகிறேன்.  ரிஷப் பந்த் ஆடுகளம் இறங்கி ரன்கள் குவிக்க வேண்டும் என்ற வேட்கையில் உள்ளார். இது அவருக்கு சரியான தருணமாக இருந்தது. முதல் ஆறு ஓவர்களுக்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்திருந்தோம். இதனால் சற்று நெருக்கடி ஏற்பட்டது. நெருக்கடியை தவான் மற்றும் ரிஷப் பந்த் சிறப்பாக எதிர்கொண்டார்கள்.

  எப்போதுமே இந்தியா வெளிநாடு சென்று விளையாடும்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது சவாலானதாகும். ஒவ்வொரு முறையில் அங்கு செல்லும்போது அணி, வீரர்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் பரிசோதனையாகும். ஆஸ்திரேலியா மாறுபட்ட பந்தை கொண்ட விளையாட்டு’’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 தொடரை 3-0 எனக் கைப்பற்றிய இந்திய அணிக்கு சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். #INDvWI
  இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்திலும், லக்னோவில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 71 ரன்களிலும், சென்னையில் நேற்று நடைபெற்ற கடைசி போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸை 3-0 என இந்தியா ஒயிட்வாஷ் செய்தது.

  சிறப்பாக விளையாடி 3-0 எனக்கைப்பற்றிய இந்திய அணிக்கு ஓய்வில் இருக்கும் கேப்டன் விராட் கோலி மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டி20 அணியில் டோனி இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்று பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா கவலை தெரிவித்துள்ளார். #MSDhoni #RohitSharma
  இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. நேற்று சென்னையில் நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி போட்டியில் இந்தியா வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது.

  இந்த தொடரில் எம்எஸ் டோனி பங்கேற்கவில்லை. டி20 போட்டியில் இந்தியா அறிமுகமான காலத்தில் இருந்து விளையாடி வந்த டோனி முதன்முறையாக இந்திய அணியில் இடம்பெறவில்லை.  நேற்றைய போட்டியில் கோப்பையை கைப்பற்றியதும் டோனி அணியில் இல்லாதது மிகப்பெரிய இழப்பு என்று ரோகித் சர்மா தெரிவித்தார்.

  இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘இலங்கையில் நடைபெற்ற நிதாஹாஸ் தொடரிலும் பங்கேற்கவில்லை. எம்எஸ் டோனி இல்லாதது எந்தவொரு அணிக்கும் மிகப்பெரிய இழப்பு. அவர் அணியில் இருப்பது எனக்கு மட்டுமல்ல ஏராளமான வீரர்களுக்கு பூஸ்ட் ஆக இருக்கும். குறிப்பாக இளம் வீரர்களுக்கு’’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும் டி20 போட்டிக்கான டிக்கெட்டை கூடுதல் விலைக்கு விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். போலீஸ் ஏட்டு மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. #INDvWI
  சென்னை, நவ.11-

  சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று மாலை நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் சில தினங்களுக்கு முன்பே விற்று தீர்ந்து விட்டன. இன்று நடைபெறும் போட்டிக்காக அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திருவல்லிக்கேணி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மேரி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

  அப்போது வாலிபர் ஒருவர் மைதானத்துக்கு அருகில் வைத்து டிக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை சப்-இன்ஸ்பெக்டர் மேரி மடக்கி பிடித்தார். அந்த வாலிபர் ரூ.1200 டிக்கெட்டை ரூ.2000-க்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

  அவரிடம் இருந்து 3 டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெங்களூரை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பது தெரிய வந்தது. சென்னை, ஐதராபாத் நகரங்களில் கடந்த 4 ஆண்டுகளாக சட்ட விரோதமாக கிரிக்கெட் டிக்கெட்டுகளை விற்பனை செய்தது தெரிய வந்தது.

  பூக்கடை போக்குவரத்து போலீஸ்காரர் முத்து ஏற்பாட்டின் பேரில்தான் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டதாக அப்துல் ரகுமான் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். போலீஸ்காரர் முத்து, இதற்கு முன் திருவல்லிக்கேணி துணை ஆணையரின் தனிப்படையில் பணியாற்றியவர் ஆவார்.  போலீஸ்காரர் முத்து, கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இதுபோன்று டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதற்காக திருவல்லிக்கேணி பகுதியில் லாட்ஜில் அறை எடுத்து ஆட்களை அவர் தங்க வைத்ததும் தெரியவந்தது.

  இதனைத் தொடர்ந்து போலீஸ்காரர் முத்து மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்துல் ரகுமானை கைது செய்த போலீசார் முத்துவிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை தேடிச்சென்றனர். ஆனால் அவர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

  திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் தலைமையிலான போலீசார் அவரை தேடிவருகிறார்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேப்பாக்கத்தில் டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். #INDvWI
  இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று 7 மணிக்கு நடக்கிறது. முதல் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றது போலவே இந்த ஆட்டத்திலும் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றிபெறும் ஆர்வத்தில் ரோகித் தலைமையிலான இந்திய அணி இருக்கிறது.

  ஒயிட்வாஷ் ஆர்வத்தில் இந்திய அணி உள்ளது. அதே நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஆறுதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

  கடந்த போட்டியில் ரோகித் சர்மா அதிரடியான சதத்தை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து படைத்தார். இதேபோல் இன்றும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை ரசிகர்களை மகிழ்விப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  20 ஒவரில் 4 செஞ்சூரி அடித்து சாதனை படைத்த ரோகித் சர்மா அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையை சேப்பாக்கத்தில் படைப்பாரா? என்று எதிர்நோக்கப்படுகிறது. அதற்கு அவருக்கு இன்னும் 69 ரன்னே தேவை. ரோகித் சர்மா 2203 ரன் (79 இன்னிங்ஸ்) எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் 2271 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். இன்று இந்த சாதனையை முறியடிக்காவிட்டால் அவர் ஆஸ்திரேலிய பயணம் வரை காத்திருக்க வேண்டும்.

  ரோகித் சர்மா 74 ரன் எடுத்தால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை பெறுவார். தற்போது அவர் 330 ரன்னுடன் 4-வது இடத்தில் உள்ளார். பாபர் ஆசம் (403 ரன்), அலெக்ஸ் ஹேல்ஸ் (384), தில்சன் (346) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.  முழுமையாக வென்றால் 3 போட்டிக்கொண்ட 20 ஓவர் தொடரை 2 முறை ஒயிட்வாஷ் செய்த இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைப்பார். சர்வதேச அளவில் 3-வது கேப்டன் என்ற பெருமையை பெறுவார். சர்பிராஸ் அகமது (பாகிஸ்தான்), 5 முறையும், ஆஸ்கர்கான் (ஆப்கானிஸ்தான்) 3 முறையும் ஒயிட்வாஷ் செய்துள்ளனர்.

  இந்திய அணி 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரை ஏற்கனவே 2 முறை முழுமையாக கைப்பற்றியது. 2016-ல் ஆஸ்திரேலியாவையும், 2017-ல் இலங்கையையும் ஒயிட்வாஷ் செய்தது. தற்போது 3-வது முறையாக ஒயிட்வாஷ் ஆர்வத்தில் இந்தியா இருக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 3-வது டி20 போட்டிக்கான இந்திய அணியில் இருந்து பும்ரா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. #INDvWI
  இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-0 எனக்கைப்பற்றியது.

  3-வது மற்றும் கடைசி ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளைமறுதினம் நடக்கிறது. இதற்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த பும்ரா, குல்தீப் யாதவ் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

  வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்த உடன் இந்தியா ஆஸ்திரேலியா செல்கிறது. வெளிநாட்டு தொடருக்கு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதால் இந்த ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

  3-வது போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

  1. ரோகித் சர்மா, 2. ஷிகர் தவான், 3. கேஎல் ராகுல், 4. தினேஷ் கார்த்திக், 5. மணிஷ் பாண்டே, 6. ஷ்ரேயாஸ் அய்யர், 7. ரிஷப் பந்த், 8. குருணால் பாண்டியா, 9. வாஷிங்டன் சுந்தர், 10. சாஹல், 11. புவனேஸ்வர் குமார், 12. கலீல் அஹமது, 13. ஷபாஸ் நதீம், 14. சித்தார்த் கவுல்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  லக்னோவில் நடைபெற இருக்கும் 2-வது டி20 போட்டியில் 130 ரன்கள் அடித்தாலே மிகப்பெரிய விஷயம் என்று ஆடுகளம் பராமரிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #INDvWI
  இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் பெற்றது.

  2-வது போட்டி லக்னோவில் உள்ள எகனா மைதானத்தில் நாளை (6-ந்தேதி) நடக்கிறது. எகனா மைதானத்தில் முதன்முறையாக சர்வதேச போட்டி நடைபெறுகிறது. பொதுவாக டி20-க்கான ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரியாக இருக்கும். முதல் டி20 போட்டி என்பதால் ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக பேட்டிங் செய்வதற்கு சாதகமாக ஆடுகளமாக அமைக்கப்பட்டிருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

  ஆனால், முதலில் பேட்டிங் செய்த அணி 130 ரன்கள் அடித்தாலே வெற்றிக்கான ரன்னாக இருக்கும் என எகனா மைதான ஆடுகள பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து ஆடுகள பராமரிப்பாளர் கூறுகையில் ‘‘கட்டாயம் இது அதிக ஸ்கோர் அடிக்கும் ஆடுகளமாக இருக்காது. இருபக்கமும் வெடிப்பு காணப்பட்டு அதன்மீது நீண்ட உயிரற்ற புற்கள் காணப்படும். ஸ்லோ பவுன்ஸ் பிட்ச் ஆக இருக்கும். தொடக்கத்தில் இருந்தே சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்காற்றுவார்கள்.

  ஒடிசாவில் உள்ள போலங்கிர் இருந்து கொண்டு வந்த மண்ணால் ஆடுகளம் உருவாக்கப்பட்டுள்ளது. இரு அணிகளும் ரன்கள் குவிக்க கஷ்டப்பட வேண்டியிருக்கும்’’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் அதிரடி வீரரான ஹெட்மையருக்கு பொறுமை தேவை. அவர் ஆடுகளத்தில் அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும் என லாரா தெரிவித்துள்ளார். #INDvWI
  இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஒருநாள் போட்டியில் அதிரடி காட்டிய இளம் வீரரான ஹெட்மையர் 7 பந்தில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார்.  மைதானத்தில் இறங்கியதும் அனைத்து பந்துகளையும் அடித்து விளையாட நினைக்கிறார். இந்நிலையில் ‘‘ஹெட்மையர் பொறுமை காக்க வேண்டும். அவராகவே கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்’’ என்று லாரா தெரிவித்துள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஈடன் கார்டனில் அசாருதீன் பெல் அடித்து போட்டியை தொடங்கி வைத்ததற்கு இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் காம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார். #INDvWI
  இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. ஈடன் கார்டன் மைதானத்தில் சர்வதேச போட்டிகள் நடைபெறும்போது, முன்னாள் வீர்ரகள் கவுரவிக்கப்படுவார்கள். அவர்கள் பெல் அடித்து போட்டியை தொடங்கி வைப்பார்கள்.

  நேற்றைய போட்டியை முன்னாள் கேப்டன் அசாருதீன் பெல் அடித்து போட்டியை தொடங்கி வைத்தினார். அசாருதீன் மீது சூதாட்ட புகார் கூறப்பட்டது. இதனால் அவருக்கு பிசிசிஐ தடைவிதித்திருந்தது. இந்த வழக்கை எதிர்த்து நீதிமன்றத்தில் வெற்றி பெற்றார்.

  நேற்று அசாருதீன் பெல் அடித்து போட்டியை தொடங்கி வைத்ததற்கு முன்னாள் தொடக்க வீரர் கவுதம் காம்பீர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஈடன் கார்டன் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஆனால், சிஓஏ (கிரிக்கெட் நிர்வாகக்குழு) மற்றும் மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கம் தோல்வியடைந்து விட்டது. அவர் போட்டியை தொடங்கி வைத்தது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று தெரிவித்துள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram