செய்திகள்

ஐசிசி சிறந்த வீரர், அதிவேகமாக 300 விக்கெட்- சுழற்பந்து ஜாம்பவான் அஸ்வினுக்கு இன்று பிறந்த நாள்

Published On 2018-09-17 08:11 GMT   |   Update On 2018-09-17 08:11 GMT
இந்திய டெஸ்ட் அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இன்று 33-வது வயதிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார். #Ashwin
இந்திய டெஸ்ட் அணியின் தலைசிறந்த வீரராக அஸ்வின் திகழ்ந்து வருகிறார். தனது மாயாஜால ஆஃப் ஸ்பின்னால் உலக பேட்ஸ்மேன்களை திணறடித்தவர். பந்து வீச்சுடன் சிறப்பாக பேட்டிங் செய்யும் வல்லமையும் படைத்தவர்.

இந்திய அணி நம்பர் ஒன் இடத்தை பிடிப்பதற்கு இவரது பந்து வீச்சு முக்கிய காரணமாக இருந்தது. 2016-ல் ஐசிசியின் சிறந்த வீரர், சிறந்த டெஸ்ட் வீரர் விருதுகளையும்,  300 விக்கெட்டுக்களை விரைவாக வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற புகழையும் பெற்றுள்ள அஸ்வின் இன்று தனது 33-வது வயதிற்குள் அடியெடுத்து வைக்கிறார்.



இவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ந்தேதி இந்திய ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன அஸ்வின், 2011-ம் ஆண்டு நவம்பர் 6-ந்தேதி டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

இதுவரை 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 26 முறை ஐந்து விக்கெட்டுக்கள், 7 முறை 10 விக்கெட்டுக்களுடன் 327 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். அத்துடன் 4 சதங்கள், 11 அரைசதங்களுடன் 2289 ரன்கள் அடித்துள்ளார்.

111 ஒருநாள் போட்டியில் 150 விக்கெட்டுக்களும், 46 டி20 போட்டியில் 52 விக்கெட்டுக்களும் கைப்பற்றியுள்ளார்.
Tags:    

Similar News