செய்திகள்

ஆடுகளத்தில் பந்து நன்கு ஸ்விங் ஆனது- பும்ரா

Published On 2018-08-31 06:11 GMT   |   Update On 2018-08-31 06:11 GMT
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் நாங்கள் எதிர்பார்த்தை விட ஆடுகளத்தில் பந்து நன்கு ஸ்விங் ஆனது என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறியுள்ளார். #ENGvIND #JaspritBumrah
சவுதம்டன்:

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி நேற்று சவுதம்டனில் தொடங்கியது.

டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இந்தியாவின் வேகப்பந்து வீச்சில் விக்கெட்டுகளை இழந்து திணறியது. 86 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்தது. அதன்பின் மொய்ன் அலி, சாம் குர்ரன் ஜோடி சரிவில் இருந்து மீட்டது.

சாம்குர்ரன் 78 ரன்னும், மொய்ன்அலி 40 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து 76.4 ஓவரில் 246 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

இந்திய தரப்பில் பும்ரா 3 விக்கெட்டும், இஷாந்த்சர்மா, முகமது சமி, அஸ்வின் தலா 2 விக்கெட்டும், பாண்ட்யா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் விளையாடிய இந்தியா, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்து இருந்தது. ஷிகா தவான் 3 ரன்னுடனும், லோகேஷ் ராகவ் 11 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

நேற்றைய போட்டியில் காலை வேளையில் நன்கு வெயில் அடித்தது. இதனால் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாகதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். பந்தை நன்கு ஸ்விங் செய்து இங்கிலாந்து வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர்.

இதுகுறித்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறியதாவது:-

நாங்கள் எதிர்பார்த்தை விட ஆடுகளத்தில் பந்து நன்கு ஸ்விங் ஆனது. இதன் காரணமாகவே விரைவில் விக்கெட்டுகளை கைப்பற்ற முடிந்தது.

இவ்வாறு அவர் கூறினார். #ENGvIND #JaspritBumrah
Tags:    

Similar News