செய்திகள்

சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் நடாலை பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்தார் பெடரர்

Published On 2018-06-16 21:36 GMT   |   Update On 2018-06-16 21:59 GMT
ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ரோஜர் பெடரர் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். #RogerFederer #WorldNo1 #RafaelNadal

ஸ்டட்கர்ட்:

ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 24-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் நிக் கைர்ஜியோசுடன் மோதினார். 1 மணி 51 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த மோதலில் பெடரர்  6-7(2-7), 6-2, 7-6(7-5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பெடரர் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் கனடாவின் மிலோஸ் ராவ்னிக்கை எதிர்கொள்கிறார்.

நேற்றைய அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 36 வயதான பெடரர், சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். நாளை வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் பெடரர் முதலிட அரியணையில் ஏறுவார். ஸ்பெயினின் ரபெல் நடால் 2-வது இடத்துக்கு இறங்குவார். #RogerFederer #WorldNo1 #RafaelNadal 
Tags:    

Similar News