செய்திகள்

டெத் ஓவர் பந்து வீச்சு சூப்பராக அமைந்தது- ஷுப்மான் கில்

Published On 2018-05-20 12:17 GMT   |   Update On 2018-05-20 12:17 GMT
எங்களுடைய டெத் ஓவர் பவுலிங்குதான் டர்னிங் பாயின்ட் ஆக அமைந்தது என கொல்கத்தா இளம் வீரர் ஷுப்மான் கில் தெரிவித்துள்ளார். #IPL2018 #KKR
சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 54-வது ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது.

பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது.

ஒரு கட்டத்தில் சன்சரைசர்ஸ் ஐதராபாத்தின் ஸ்கோர் 13 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்களாக இருந்தது. ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் 12.5 ஓவரில் 17 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் கொல்கத்தா பந்து வீச்சாளர்கள் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் ஸ்கோரை கட்டுப்படுத்தினார்கள்.



கடைசி 7 ஓவரில் (42 பந்தில்) 44 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்கள். குறிப்பாக இளம் வீரர் பிரஷித் கிருஷ்ணா 4 ஓவரில் 30 ரன்கள் மட்டு விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

டெத் ஓவரில் சிறப்பாக பந்து வீசியதே வெற்றிக்கு காரணம் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இளம் பேட்ஸ்மேன் ஆன ஷுப்மான கில் கூறியுள்ளார். இதுகுறித்து ஷுப்மான் கில் கூறுகையில் ‘‘எங்களுடைய பந்து வீச்சாளர்கள் டெத் ஓவரில் சிறப்பாக பந்து வீசியதே டர்னிங் பாயின்ட்டாக அமைந்தது. பிரதிஷ் அருமையாக பந்து வீசினார். டெத் ஓவரில் அனைத்து பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசினார்கள்’’ என்றார்.
Tags:    

Similar News