செய்திகள்

2019 உலக கோப்பை தொடர் - முதல் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவுடன் ஜூன் 5ல் மோதுகிறது இந்தியா

Published On 2018-04-24 17:47 GMT   |   Update On 2018-04-24 17:47 GMT
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. #2019WorldCup #INDvsSA #INDvsPAK
கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ அதிகாரிகள் கூறியதாவது:



2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரங்களில் நடக்கிறது. அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடர் மார்ச் 29-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதற்கு அடுத்த 15 தினங்களில் உலக கோப்பை போட்டிகள் தொடங்குகிறது.

இந்தியா தனது முதல் லீக் போட்டியில் ஜூன் 5-ம் தேதி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. மேலும், பரம எதிரியான பாகிஸ்தானுடன் ஜூன் 16ம் தேதி மோதுகிறது. #2019WorldCup #INDvsSA #INDvsPAK #Tamilnews
Tags:    

Similar News