செய்திகள்

நான் வந்துட்டேன்னு சொல்லு- தமிழில் டுவிட் செய்த ஹர்பஜன் சிங்

Published On 2018-03-22 15:58 GMT   |   Update On 2018-03-22 15:58 GMT
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள ஹர்பஜன் சிங், நான் வந்துட்டேன்னு சொல்லு என டுவிட்டரில் தமிழில் பதிவு செய்துள்ளார். #IPL2018 #CSK #HarbhajanSingh

சென்னை:

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலத்தில் இந்திய அணியின் முன்னணி சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். அவர் கடந்த ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வந்தார்.

சென்னை அணியில் ஏலம் எடுக்கப்பட்ட உடனே ஹர்பஜன் சிங் தனது மகிழ்ச்சியை வெளிகாட்டும் வகையில் டுவிட்டரில் தமிழில் ஒரு பதிவு செய்திருந்தார். இந்நிலையில், ஹர்பஜன் சிங் இன்று சென்னை வந்துள்ளார். அவருக்கு சென்னை சூப்பர் கிக்ஸ் அணி சார்பில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.



இதையடுத்து ஹர்பஜன் சிங் மீண்டும் தமிழில் ஒரு டுவிட் செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

நான் வந்துட்டேன்னு சொல்லு

தமிழின் அன்பு உடம்பெறப்பெல்லாம் எப்புடி இருக்கீக மக்கா.

உங்க வீட்டுப்புள்ள சேப்பாக்கத்துல, மஞ்ச ஜெர்சில, "வீரமா", காதுகிழியிற உங்க விசிலுக்கு நடுவுல @ChennaiIPL க்காக விளாட(ச) போறத நெனச்சாலே "மெர்சலாகுது"

தாய் உள்ளம் கொண்ட அன்பு தமிழ்நாடு வாழ்க!!!!

இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். மேலும் அவர் செய்த மற்றொரு டுவிட்டில் அவர் பெயர் அச்சிடப்பட்ட சென்னை அணியின் ஜெர்சியின் படத்தை பதிவு செய்துள்ளார். அதில் 27 என்ற எண் அச்சிடப்பட்டிருந்தது. #IPL2018 #CSK #HarbhajanSingh
Tags:    

Similar News