செய்திகள்

இளம் வயதில் முதல் இடத்தை பிடித்து ஆப்கானிஸ்தான் வீரர் வரலாற்று சாதனை

Published On 2018-02-20 13:21 GMT   |   Update On 2018-02-20 13:21 GMT
ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 19 வயதிலேயே ஒருநாள் பந்து வீச்சு தரவரிசையில் முதல் இடம் பிடித்து வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். #ICCRankings
ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். இவர் சமீப காலமாக சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேயை எதிர்த்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் ஆப்கானிஸ்தான் 4-1 என வெற்றி பெற்றது. ஐந்து போட்டிகளில் ரஷித் கான் 16 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்

இதேபோல் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சிறப்பாக பந்து வீசினார். இதனால் இருவரும் ஒருநாள் போட்டிக்கான பந்து வீச்சு தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளனர். இருவரும் முதல் இடத்தை பிடிப்பது இதுதான் முதன்முறையாகும்.

குறிப்பாக ரஷித்கான் 19 வயது 153 நாட்களில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் மிக இளம் வயதில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த வீரர் என்ற சாதனையைப் பெற்றுள்ளார்.

இருவரும் 787 புள்ளிகள் பெற்றுள்ளனர். தசம புள்ளிகள் அடிப்படையில் பும்ரா முதல் இடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்து வீரர் டிரென்ட் போல்ட் 729 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ஹசில்வுட் 4-வது இடத்திலும், ஹசன் அலி 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
Tags:    

Similar News