செய்திகள்

விராட்கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன்: பயிற்சியாளர் ரவிசாஸ்திரி புகழாரம்

Published On 2018-02-17 08:46 GMT   |   Update On 2018-02-17 08:46 GMT
உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட்கோலி தான் என இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார். #SAvIND #RaviShastri #ViratKohli
தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி போட்டிகள் கொண்ட 6 ஒருநாள் தொடரில் விளையாடியது. ஐந்து போட்டிகள் முடிவில் இந்திய அணி 4-1 என ஏற்கனவே ஒருநாள் தொடரை கைப்பற்றி 25 ஆண்டு கால கனவை நினைவாக்கி வரலாறு படைத்தது.

இந்த வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நிருபர்களிடம் கூறியதாவது:-

டெஸ்ட் தொடரில் 0-2 என்ற கணக்கில் பின் தங்கி இருந்தோம். 3-வது டெஸ்டில் பெற்ற வெற்றி புத்துயிர் அளித்தது. அதே உத்வேகத்துடன் விளையாடி ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. மிகவும் சிறப்பானது. கடந்த 2 வாரங்களாக வீரர்கள் அபாரமாக விளையாடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதற்கான அனைத்து பாராட்டுகளும் அணியின் தலைவரான விராட் கோலியை தான் சாரும். ஏனென்றால் அவர்தான் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டு அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார்.



விராட்கோலியிடம் இருந்த தீவிரமே அணியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரிடம் இருக்கும் திறமையால் அவர் மிகுந்த முன்னேற்றம் அடைந்துள்ளார். தற்போது உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட்கோலிதான்.

மிடில் ஓவரில் சுழற்பந்து வீரர்களான சாஹல், குல்தீப் சிறப்பாக செயல்பட்டனர். இருவரும் மிகவும் அபாரமாக பந்து வீசி தென் ஆப்பிரிக்காவுக்கு நெருக்கடி கொடுத்தனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News