செய்திகள்

டி20 பேட்ஸ்மேன் தரவரிசை: முதல் இடத்தை பிடித்தார் பாக். பேட்ஸ்மேன் பாபர் ஆசம்

Published On 2018-01-29 10:13 GMT   |   Update On 2018-01-29 10:13 GMT
பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன பாபர் ஆசம் ஐசிசியின் டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார். #ICCRankings #babarAzam
நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. நேற்றுடன் முடிவடைந்த இந்த தொடரில் பாகிஸ்தான் 2-1 எனத் தொடரைக் கைப்பற்றியது. முதல் போட்டியில் தோல்வியடைந்த பாகிஸ்தான் கடைசி இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்று அசத்தியது.

இதில் முன்னணி பேட்ஸ்மேன் ஆன பாபர் ஆசம் 109 ரன்கள் சேர்த்தார். இதனால் 11 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை பிடித்துள்ளார். பாபர் ஆசம் 786 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் 784 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கும், இந்திய கேப்டன் விராட் கோலி 776 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கும் பின்தங்கியுள்ளனர்.



தொடரைக் கைப்பற்றியதன் மூலம் 126 புள்ளிகளுடன் பாகிஸ்தான் முதல் இடத்தை பிடித்துள்ளது. 123 புள்ளிகளுடன் நியூசிலாந்து 2-வது இடத்தையும், 121 புள்ளிகளுடன் இந்தியா 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெர் 718 புள்ளிகளுடன் முதன்முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளார். ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் 717 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இஷ் சோதி 712 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 702 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார்.



பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் லோகேஷ் ராகுல் 6-வது இடத்திலும், ரோகித் சர்மா 15-வது இடத்திலும் உள்ளனர்.  #ICCRankings #ICCT20Rankingsm BabarAzam
Tags:    

Similar News