செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் வோஸ்னியாக்கி

Published On 2018-01-21 07:02 GMT   |   Update On 2018-01-21 07:02 GMT
ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதி போட்டிக்கு கரோலின் வோஸ்னியாக்கி தகுதி பெற்றுள்ளார்.#AUSOpen #AustralianOpen #Wozniacki #CarolineWozniacki
மெல்போர்ன்:

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

இன்று காலை நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்)- மக்டலினா ரைபரிகோவா (சுலோ வாக்கியா) மோதினார்கள்.

இதில் வோஸ்னியாக்கி 6-3, 6-0 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

வோஸ்னியாக்கி கால் இறுதியில் தரவரிசையில் 39-வது இடத்தில் இருக்கும் கர்லா சுராசுடன் (ஸ்பெயின்) மோதுகிறார். அவர் 4-வது சுற்றில் அனெட்டை (எஸ்டோனியா) 4-6, 6-4, 8-6 என்ற கணக்கில் வென்றார். #AUSOpen #AustralianOpen #Wozniacki #CarolineWozniacki
Tags:    

Similar News