செய்திகள்

கவனக்குறைவான ஆட்டம்: ஹர்த்திக் பாண்ட்யாவை என்னுடன் ஒப்பிடவேண்டாம் - கபில்தேவ்

Published On 2018-01-18 07:54 GMT   |   Update On 2018-01-18 07:54 GMT
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் பாண்டியா மிகவும் அற்பமான முறையில் ஆட்டம் இழந்தார். இதே தவறுகளை அவர் தொடர்ந்து செய்தால் என்னுடன் ஒப்பிடுவதற்கு தகுதியானவர் இல்லை என கபில்தேவ் கூறியுள்ளார். #SAvIND #KapilDev #HardikPandya #Pandya
புதுடெல்லி:

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியா. சிறப்பாக விளையாடி வரும் அவர் முன்னாள் ஆல்ரவுண்டர் கபில்தேவுடன் ஒப்பிடப்பட்டு வருகிறார். அவரும் பாண்டியாவை பாராட்டி இருந்தார்.

தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஹர்த்திக் பாண்டியா 93 ரன்கள் எடுத்தார். 2-வது இன்னிங்சில் 1 ரன் தான் எடுத்தார்.

செஞ்சூரியனில் நடந்த 2-வது டெஸ்டில் அவர் பேட்டிங்கில் மிகவும் அற்பமான தவறுகளை செய்தார். அவரது அவுட் சிறுபிள்ளைதனமாக இருந்தது. இந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் 15 ரன்னும், 2-வது இன்னிங்சில் 6 ரன்னும் எடுத்தார்.

இந்த நிலையில் தவறான ஆட்டத்தை தொடர்ந்தால் பாண்டியாவை என்னுடன் ஒப்பிடவேண்டாம் என்று கபில்தேவ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-



ஹர்த்திக் பாண்டியாவிடம் ஏராளமான திறமைகள் இருக்கிறது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் அவர் அதை நிரூபித்தார். ஆனால் அவர் மனரீதியாக அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

2-வது டெஸ்டின் இரு இன்னிங்சில் அவர் மிகவும் அற்பமான முறையில் ஆட்டம் இழந்தார். இதே தவறுகளை அவர் தொடர்ந்து செய்தால் என்னுடன் ஒப்பிடுவதற்கு தகுதியானவர் இல்லை.

இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.

இதேபோல முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் பாண்டியாவின் கவனக் குறைவான ஆட்டத்தை விமர்சித்து உள்ளனர். முதல் இன்னிங்சில் மிக கவனக்குறைவால் ‘ரன்அவுட்’ ஆனார். 2-வது இன்னிங்சில் தேவையில்லாத பந்தை தேவையில்லாமல் தொட்டு விக்கெட் கீப்பரிடம் ‘கேட்ச்’ ஆனார். #SAvIND #KapilDev #HardikPandya #Pandya
Tags:    

Similar News