செய்திகள்

தவறுகளில் இருந்து பாடம் கற்றோம்: இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவான்

Published On 2017-12-17 03:10 GMT   |   Update On 2017-12-17 03:10 GMT
கொல்கத்தா டெஸ்ட் மற்றும் தரம்சலா ஒருநாள் போட்டியில் செய்த தவறில் இருந்து பாடம் கற்றுக் கொண்டோம் என்று தொடக்க பேட்ஸ்மேன் தவான் கூறியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டின் முதல் இன்னிங்சிலும், தரம்சலா ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. அந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டோம் என்று தவான் கூறியுள்ளார்.

இதுகுறித்து தவான் கூறுகையில் ‘‘இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் (கொல்கத்தா) மற்றும் முதலாவது ஒரு நாள் போட்டிக்கு (தர்மசாலா) பிறகு நாங்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளோம். இவ்விரு ஆடுகளங்களும் ஈரப்பதமாக இருந்தன. பந்து வேகமாக நகர்ந்தன. இருப்பினும் நாங்கள் நேர்மறையான எண்ணத்துடன்தான் விளையாடினோம்.



ஆனால் நினைத்த மாதிரி ஆட்டத்தின் போக்கு அமையவில்லை. சில நேரம் வீழ்ச்சியை சந்திக்கும்போதுதான் கற்றுக்கொள்ள வழிபிறக்கும். அதாவது தரம்சாலாவில் தோல்வி அடைந்து, மொகாலி ஒரு நாள் போட்டியில் களம் இறங்கியபோது அந்த ஆடுகளமும் ஈரப்பதமாகவே இருந்தது. ஆனால் தொடக்கத்தில் கவனமுடன் செயல்பட்டு, 10 ஓவர்களுக்கு பிறகு ஆட்டத்தின் போக்கை மாற்றினோம். ஏற்கனவே சொன்ன மாதிரி, தவறுகளை திருத்திக்கொண்டு விளையாடினோம்’’ கூறினார்.
Tags:    

Similar News