செய்திகள்

86 அணிகள் பங்கேற்கும் தென்மண்டல பல்கலைக்கழக கபடி: சென்னையில் நாளை தொடக்கம்

Published On 2017-11-18 07:03 GMT   |   Update On 2017-11-18 07:03 GMT
சென்னையில் 86 அணிகள் பங்கேற்கும் தென்மண்டல பல்கலைக்கழக கபடி போட்டி நாளை முதல் 4 நாட்கள் நடத்தப்படுகிறது.
சத்யபாமா பல்கலைக்கழகம் சார்பில் தென்மண்டல பல்கலைக்கழக கபடி போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.

இந்தப்போட்டி நாளை (19-ந்தேதி) முதல் வருகிற 22-ந்தேதி வரை 4 நாட்கள் சோழிங்கநல்லூரில் உள்ள அந்த பல்கலைக்கழகத்தின் உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

ஆண்கள் பிரிவில் நடைபெறும் இந்தப்போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா, புதுவை ஆகிய மாநிலங்களில் இருந்து 86 பல்கலைகழகங்கள் பங்கேற்கின்றன. தமிழ் நாட்டில் இருந்து சத்யபாமா, சென்னை பல்கலைகழகம், எஸ்.ஆர்.எம்., அண்ணாமலை பல்கலைக்கழகம் போன்ற முன்னணி அணிகள் கலந்து கொள்கின்றன.

நாக் அவுட் மற்றும் ‘லீக்’ முறையில் போட்டி நடக்கிறது.

இந்தப் போட்டியில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரியானாவில் வருகிற 25-30-ந்தேதி வரை நடைபெறும். அகில இந்திய பல்கலைக்கழக போட்டிக்கு தகுதி பெறும்.

தொடக்க விழாவில் சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் ரெமிபாய் ஜேப்பியார், துணைத்தலைவர் மரிய ஜான்சன், இணைவேந்தர் மரிய ஜீனா ஜான்சன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

மேற்கண்ட தகவலை போட்டி அமைப்பு குழு செயலாளரும், உடற்கல்வி இயக்குனருமான கே.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News