செய்திகள்

உலக டென்னிஸ் போட்டி: சிலிச் அதிர்ச்சி தோல்வி

Published On 2017-11-13 06:45 GMT   |   Update On 2017-11-13 06:46 GMT
உலக ஆண்கள் டென்னிஸ் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் சிலிச் 4-6, 6-3, 4-6 என்ற கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.
லண்டன்:

ஒவ்வொரு ஆண்டும் இறுதியில் ‘டாப் 8’ தரவரிசையில் இருக்கும் வீரர்கள் பங்கேற்கும் ஏடிபி டென்னிஸ் இறுதி சுற்று நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான ஏடிபி உலக டென்னிஸ் போட்டி லண்டனில் நேற்று தொடங்கியது. வருகிற 19-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

இந்த 8 வீரர்களும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டனர். போரிஸ் பெக்கா அணியில் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), அலெக்சாண்டர் சுவேரேவ் (ஜெர்மனி), சிலிச் (குரோஷியா), ஜாக்சோக் (அமெரிக்கா) ஆகியோரும், பீட்சாம்ராஸ் அணியில் நம்பர் ஒன் வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்), டொமினிக் தியம் (ஆஸ்திரேலியா), டிமிட்ரோவ் (பல்கேரியா), டேவிட் கோபின் (பெல்ஜியம்) ஆகியோரும் இடம் பெற்றனர்.

நேற்று நடந்த ஆட்டத்தில் சிலிச் அதிர்ச்சிகரமாக தோற்றார். அவர் 4-6, 6-3, 4-6 என்ற கணக்கில் சுவேரேவிடம் வீழ்ந்தார். மற்றொரு ஆட்டத்தில் பெடரர் 6-4, 7-6 (7-4) என்ற கணக்கில் சோக்கை வீழ்த்தினார்.



இன்று நடைபெறும் ஆட்டங்களில் டொமினிக் தியம்- டிமிட்ரோவ், நடால்- கோபின் மோதுகிறார்கள்.
Tags:    

Similar News