செய்திகள்

ஸ்ரீசாந்துக்கு அசாருதீன் அறிவுரை

Published On 2017-11-12 04:55 GMT   |   Update On 2017-11-12 04:55 GMT
இந்திய அணியின் கதவு அடைக்கப்படவில்லை எனவும் தான் நிரபராதி என்பதை நிரூபித்து விட்டு பொறுமை காக்க வேண்டும் எனவும் ஸ்ரீசாந்த்க்கு அசாருதீன் அறிவுரை கூறினார்.
2013-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்து ஆடிய இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட்டதாக டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆயுட்கால தடை விதித்தது. அதனை எதிர்த்து ஸ்ரீசாந்த் கேரள கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் செய்த அப்பீலில், இந்திய கிரிக்கெட் வாரியம் ஸ்ரீசாந்துக்கு விதித்த ஆயுட்கால தடை தொடரும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் அளித்த ஒரு பேட்டியில், ‘ஸ்ரீசாந்த் திறமை வாய்ந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஆவார். இந்திய அணியின் கதவு அவருக்கு அடைக்கப்படவில்லை. அவர் தான் நிரபராதி என்பதை நிரூபித்து விட்டு பொறுமை காக்க வேண்டும். அவர் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது என்பது முக்கியமானது’ என்று தெரிவித்தார். 
Tags:    

Similar News