search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீசாந்த்"

    • நிச்சயமாக இந்த சீசன் ரோகித் சர்மாவுக்கு பிரமாதமாக இருக்கும்.
    • அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை கேப்டனாக இல்லை என்றாலும் பின்னால் நின்று வழி நடத்துவார்.

    மும்பை:

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து முறை கோப்பையை வாங்கி கொடுத்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நியமித்தது.

    இது ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் வீரர்களிடம் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவி விட்டது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் தற்போது கடைசி இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது.

    இந்நிலையில் ரோகித் சர்மா கேப்டன் சுமை இல்லாமல் சுதந்திரமாக விளையாட விரும்புவார் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நாங்கள் அனைவரும் உலக கோப்பையில் வென்று கொடுத்திருக்கிறோம். ஹர்திக் பாண்டியா தலைமையில் ரோகித் சர்மா விளையாடுவாரா என்று பலரும் பல விதமான கதைகளை கூறி வருகிறார்கள். ஆனால் என்னை கேட்டால் ரோகித் சர்மா கேப்டன் சுமை இல்லாமல் சுதந்திரமாக விளையாட விரும்புவார். எனக்கு ரோகித் பற்றி நன்றாக தெரியும். அவர் சுதந்திரமாக விளையாடி அதிரடியாக ரன்களை சேர்த்து ஆரஞ்சு தொப்பியை வெல்வதற்கு கூட அவர் முயற்சி செய்வார். நிச்சயமாக இந்த சீசன் ரோகித் சர்மாவுக்கு பிரமாதமாக இருக்கும். அவர் மும்பை இந்தியன்ஸ் அணியை கேப்டனாக இல்லை என்றாலும் பின்னால் நின்று வழி நடத்துவார்.

    மாற்றத்திற்கு ரோகித் சர்மா தயாராக இருக்க வேண்டும். எந்த சூழல் வருகிறதோ, அதனை அவர் ஏற்றுக்கொண்டு விளையாட வேண்டும். மும்பைக்கு மட்டுமல்ல அவர் எந்த அணிக்கு சென்றாலும் ரோகித் சர்மா ஒரே மாதிரி தான் இருப்பார். கேப்டன் பதவி இல்லாததால் ரோகித் சர்மா தனிப்பட்ட முறையில் பல கஷ்டங்களை சந்தித்து இருக்கக்கூடும். ஆனால் நிச்சயமாக அதில் இருந்து வெளியே வருவார். ஒரு சாம்பியன் வீரராக மீண்டும் திகழ்வார் ரோகித் அதிரடியை காண காத்திருங்கள் என்று ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

    • ஒரு சாதாரண பவுலர் அல்லது ஒரு முதல் தர கிரிக்கெட் வீரருக்கு கைகளை சுழற்ற தெரிந்தாலே போதும்.
    • அவரை போட்டியை வெல்லும் வீரராக மாற்றும் வலிமை கொண்டவர் சிஎஸ்கே கேப்டன் டோனி.

    ஐபிஎல் 2024 தொடர் நாளை சேப்பாக்கத்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் சிஎஸ்கே- ஆர்சிபி அணிகள் மோதுகிறது. இந்த ஐபிஎல் தொடருடன் சென்னை அணியின் கேப்டன் டோனி ஓய்வு பெறுவார் என தகவல்கள் பரவி வருகிறது. இதனால் இந்திய முன்னாள் வீரர்கள் பலர் டோனி குறித்தும் அவரது கேப்டன்ஷிப் குறித்தும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் டோனியிடம் எந்த வீரரை கொடுத்தாலும் அவர்களை சிறந்தவர்களாக மாற்றக்கூடியவர் என இந்தியாவின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    ஒரு சாதாரண பவுலர் அல்லது ஒரு முதல் தர கிரிக்கெட் வீரருக்கு கைகளை சுழற்ற தெரிந்தாலே போதும். அவரை போட்டியை வெல்லும் வீரராக மாற்றும் வலிமை கொண்டவர் சிஎஸ்கே கேப்டன் டோனி. அவரிடம் எந்த வீரரை கொடுத்தாலும் அவர்களை சிறந்தவர்களாக மாற்றக்கூடியவர்.

    இவ்வாறு ஸ்ரீசாந்த் கூறினார்.

    • எலிமினேட்டர் சுற்றில் இந்தியா கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
    • இதில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    லெஜண்ட் லீக் கிரிக்கெட் தொடர் நவம்பர் 18-ந் தேதி தொடங்கி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா கேப்பிட்டல்ஸ், மனிபால் டைகர், குஜராத் ஜெயண்ட்ஸ், அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத், சதர்ன் சூப்பர் ஸ்டார்ஸ், பில்வார கிங்ஸ் என்ற 6 அணிகள் பங்கேற்றது. இந்த தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

    இந்நிலையில் நேற்று எலிமினேட்டர் சுற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின் போது கவுதம் கம்பீர் தன்னை சூதாட்டவர் என்று கூறியதாக ஸ்ரீ சாந்த் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

    இது குறித்து ஸ்ரீசாந்த் பேசியதாவது:-

    போட்டி நடந்து கொண்டிருக்கும் போது கம்பீர் என்னை கூப்பிட்டு கொண்டே இருந்தார். நான் ஒரு கெட்ட வார்த்தை கூட உபயோகிக்கவில்லை. என்ன சொல்கிறாய்? என்ன சொல்கிறாய்? என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். சொல்லப்போனால், அவர் என்னை சூதாட்ட வீரர் சூதாட்ட வீரர் என்று சொல்லிக்கொண்டே இருந்ததால், கிண்டலாகச் சிரித்துக்கொண்டே இருந்தேன்.

    போட்டி நடந்து கொண்டிருந்த போது அவர் பயன்படுத்திய வார்த்தை இது. உண்மையில், நடுவர்கள் அவரைக் கட்டுப்படுத்த முயன்றபோது அவர் அதே வார்த்தையை பயன்படுத்தினார். உடனே நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். ஆனால் அவர் அதையே திரும்பத் திரும்பச் சொன்னார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×