செய்திகள்

பெண்கள் ஆசியக் கோப்பை ஹாக்கி: 4-1 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்தியா வெற்றி

Published On 2017-10-30 11:26 GMT   |   Update On 2017-10-30 11:26 GMT
ஜப்பானின் காகமிகஹாராவில் நடைபெற்ற பெண்கள் ஆசியக் கோப்பையின் இன்றைய ஆட்டத்தில் 4-1 என்ற கணக்கில் சீனாவை தோற்கடித்து இந்தியா அபார வெற்றி பெற்றது.
டோக்கியோ:

ஜப்பானின் காகமிகஹாரா மைதானத்தில் பெண்கள் ஆசியக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா-சீனா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.



இந்தியாவின் நவ்நீத் கவுர், நேகா கோயல், குர்ஜித் கவுர் மற்றும் ராணி தலா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டினர். இதற்கு முன் நடைபெற்ற போட்டியில் சிங்கப்பூரை 10-0 க்கு என்ற கணக்கில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது பாதியின் 19-வது நிமிடத்தில் குர்ஜித் முதல் கோல் அடித்தார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து கோல்கள் அடித்து இந்தியா வெற்றியை நிர்ணயித்தது.

Tags:    

Similar News