செய்திகள்

‘பி’ கிரேடு கிரிக்கெட்: 40 சிக்சர்கள் விளாசி அசத்திய அமெரிக்க வீரர்

Published On 2017-10-16 12:45 GMT   |   Update On 2017-10-16 12:45 GMT
அமெரிக்காவில் நடைபெற்ற ‘பி’ கிரேடு கிரிக்கெட்டில் வெஸ்ட் ஆகஸ்டா அணியின் ஜோஷ் டன்ஸ்டன் 40 சிக்சர்கள் விளாசி அசத்தியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள விர்ஜின் மாகாணத்தில் போர்ட் ஆகஸ்டா கிரிக்கெட் சங்கம் சார்பில் ‘பி’ கிரேடு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் வெஸ்ட் ஆகஸ்டா - சென்ட்ரல் ஸ்டிர்லிங் அணிகள் மோதின. முதில் வெஸ்ட் ஆகஸ்டா அணி பேட்டிங் செய்தது. 3-வது வீரராக டன்ஸ்டன் களம் இறங்கினார்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க டன்ஸ்டன் சிக்ஸராக பறக்கவிட்டார். இறுதியில் 35 ஒவர் கொண்ட போட்டியில் வெஸ்ட் ஆகஸ்டா 354 ரன்கள் சேர்த்தது. இதில் டன்ஸ்டன் 307 ரன்கள் குவித்தார்.



அணியின் மொத்த ஸ்கோரில் 86.72 சதவீதம் இவர் அடித்த ரன்கள் ஆகும். இதில் 40 சிக்சர்களும் விளாசினார். இவருக்கு அடுத்தப்படியாக 18 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். 10 ரன்கள் எடுத்திருக்கும்போது களம் இறங்கிய டன்ஸ்டன் 318 ரன்னாக இருக்கும்போது அவுட் ஆனார். ஐந்து பேர் டக்அவுட் ஆனார்கள்.

ஒருநாள் போட்டியின் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் இங்கிலாந்துக்கு எதிராக 1984-ம் ஆண்டு அணியின் ஸ்கோரில் 69.48 சதவீத ஸ்கோரை அடித்ததுதான் சாதனையாக இருந்தது. இதை ஜோஷ் டன்ஸ்டன் முறியடித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் 9 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் குவித்தது. இதில் ரிச்சர்ட்ஸ் 189 ரன்கள் குவித்து அவுட்டாகாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News