செய்திகள்

பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர் ஆசம் 6 இடத்திற்கு முன்னேறி அசத்தல்

Published On 2017-09-18 11:54 GMT   |   Update On 2017-09-18 11:54 GMT
பாகிஸ்தான் அணியின் இளம் நட்சத்திர வீரரான பாபர் ஆசம், உலக லெவன் அணிக்கெதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடி தரவரிசையில் 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் ஆசம். 22 வயதே ஆகும் இவர், 9 டெஸ்ட் போட்டிகளில் 4 அரைசதங்களுடன் 436 ரன்களும், 31 ஒருநாள் போட்டியில் 5 சதம், 6 அரைசதங்களுடன் 1455 ரன்களும், 11 டி20 போட்டிகளில் 2 அரைசதங்களுடன் 432 ரன்களும் குவித்துள்ளார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் 50-க்கு மேல் சராசரி வைத்துள்ளார்.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடும் பாபர் ஆசம், பாகிஸ்தான் அணியின் விராட் கோலி என அழைக்கப்படுகிறார்.

கடந்த வாரம் பாகிஸ்தான் - உலக லெவன் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் பாபர் ஆசம் 86, 45 மற்றும் 48 ரன்கள் என மொத்தம் 179 ரன்கள் குவித்தார். சராசரி 60 ஆகும்.



இந்த தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்ததன் மூலம் ஐ.சி.சி.யின் டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் 21 இடங்கள் முன்னேறி முதன்முறையாக 6-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். 3-வது போட்டியில் 89 ரன்கள் சேர்த்த அகமது ஷேசாத் 22-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். உலக லெவன் அணியில் விளையாடிய ஹசிம் அம்லா 3 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தை பிடித்துள்ளார்.



ஐ.சி.சி. டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி முதல் இடத்திலும், ஆரோன் பிஞ்ச் 2-வது இடத்திலும், இங்கிலாந்து வீரர் லெவிஸ் 3-வது இடத்திலும், கேன் வில்லியம்சன் 4-வது இடத்திலும், மேக்ஸ்வெல் ஐந்தாவது இடத்திலும், ஹேல்ஸ் 7-வது இடத்திலும், ஜோ ரூட் 8-வது இடத்திலும், மொகமது ஷேசாத் 9-வது இடத்திலும், டு பிளிசிஸ் 10-வது இடத்திலும் உள்ளனர்.
Tags:    

Similar News