செய்திகள்

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதல்

Published On 2017-08-18 03:10 GMT   |   Update On 2017-08-18 03:10 GMT
12-வது ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை (ஜனவரி 14-ந் தேதி) எதிர்கொள்கிறது.
துபாய் :

12-வது ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி 13-ந் தேதி முதல் பிப்ரவரி 3-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டுள்ளது. போட்டியில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, கென்யா அணிகளும், ‘பி’ பிரிவில் 3 முறை சாம்பியனான இந்தியா, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, பப்புவா நியூகினியா அணிகளும், ‘சி’ பிரிவில் வங்காளதேசம், கனடா, இங்கிலாந்து, நமிபியா அணிகளும், ‘டி’ பிரிவில் பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.

இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவையும் (ஜனவரி 14-ந் தேதி), 2-வது லீக் ஆட்டத்தில் பப்புவா நியூகினியாவையும் (16-ந் தேதி), கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வேயையும் (19-ந் தேதி) எதிர்கொள்கிறது.
Tags:    

Similar News