செய்திகள்

50மீ பிரீஸ்ட்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டி: இங்கிலாந்து வீரர் உலக சாதனை

Published On 2017-07-25 16:05 GMT   |   Update On 2017-07-25 16:05 GMT
50 மீட்டர் பிரீஸ்ட்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் 22 வயதான இங்கிலாந்து வீரர் ஆடம் பீட்டி உலக சாதனைப் படைத்துள்ளார்.
ரஷியாவின் கஸன் பகுதியில் உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்தின் 22 வயதான ஆடம் பீட்டி 50 மீட்டர் பிரீஸ்ட்ஸ்ட்ரோக் போட்டியில் பந்தய தூரத்தை 26.10 வினாடிகளில் கடந்து உலக சாதனைப் படைத்துள்ளார்.



இரண்டு வருடத்திற்கு முன் 26.42 வினாடிகளில கடந்து சாதனைப் படைத்திருந்தார். தற்போது அந்த சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

இந்த சாதனைக் குறித்து பீட்டி கூறுகையில் ‘‘நான் உலக சாதனைக்காக செல்லவில்லை. அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் கலந்து கொண்டேன்’’ என்றார்.



தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கேமரூன் வான் டெர் பர்க் 0.44 வினாடி வித்தியாசத்தில்தான் 2-வது இடம் பிடித்தார். இறுதிப் போட்டியில் பீட்டிக்கு இவர் கடும் போட்டியாக திகழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று நடைபெற்ற 100 மீட்டர் பிரீஸ்ட்ஸ்ட்ரோக் பிரிவில் தங்க பதக்கம் வென்றிருந்தார். 
Tags:    

Similar News