செய்திகள்

2-வது ஒருநாள் கிரிக்கெட்: 43 ஓவர்களில் 310 ரன்களை குவித்தது இந்தியா

Published On 2017-06-25 19:11 GMT   |   Update On 2017-06-25 19:11 GMT
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 310 ரன்களை குவித்துள்ள நிலையில் 311 என்ற கடின இலக்கை துரத்தி வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி வருகிறது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 310 ரன்களை குவித்துள்ள நிலையில் 311 என்ற கடின இலக்கை துரத்தி வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி வருகிறது.   

இந்தியா ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. இதனால் முதல்நாள் ஆட்டம் அத்துடன் கைவிடப்பட்டது.

இந்நிலையில் 2-வது ஆட்டம் இதே மைதானத்தில் இன்று நடைபெற இருந்தது. மழை பெய்ததால் ஆட்டம் காலதாமதம் ஆனது. உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது.



மழையினால தாமதம் ஆனதால் ஆட்டம் 43 ஓவராக குறைக்கப்பட்டது. மழை நின்றதும் களமிறங்கிய இந்திய அணி துவக்கம் முதலே ரன்களை குவிக்கத் துவங்கியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய அஜிங்கியா ரஹானே 104 பந்துகளில் 103 ரன்களை குவித்தார். இவருடன் களமிறங்கிய ஷிகர் தவான் 59 பந்துகளில் 63 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 66 பந்துகளில் 87 ரன்களை குவித்து ஆட்டமிழந்த நிலையில், ஹார்திக் பாண்டியா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய யுவராஜ் சிங் 14 ரன்களை குவித்தார்.

43 ஓவர்களின் முடிவில் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 310 ரன்களை குவித்தது. எம்.எஸ். தோனி மற்றும் கேதர் ஜாதவ் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இருவரும் 13 ரன்களை குவித்திருந்தனர். 311 என்ற கடின இலக்கை துரத்தி வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடி வருகிறது. 
Tags:    

Similar News