செய்திகள்

கும்ப்ளே விலகல் துரதிருஷ்டவசமானது: சேவாக்கை பயிற்சியாளராக்க வேண்டும்- நிகில் சோப்ரா

Published On 2017-06-21 10:26 GMT   |   Update On 2017-06-21 10:26 GMT
இந்திய தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்ப்ளே விலகியது துரதிருஷ்டவசமானது. சேவாக்கை பயிற்சியாளராக்க வேண்டும் என்று நிகில் சோப்ரா கூறியுள்ளார்.
இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் அனில் கும்ப்ளே. இவரது ஓராண்டு ஒப்பந்தம் நேற்றோடு முடிவடைந்தது. இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் தொடரை வரை நீடிக்க பிசிசிஐ கேட்டுக்கொண்டது.

இந்நிலையில் நேற்று திடீரென கும்ப்ளே தனது தலைமை பயிற்சியாளர் பதவில் இருந்து விலகினார்.




கும்ப்ளேவின் விலகல் குறித்து முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் நிகில் சோப்ரா கூறுகையில் ‘‘அனில் கும்ப்ளே தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியது துரதிருஷ்டவசமானது. இந்திய அணிக்குள் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. இருந்தாலும் இது பெரிய இழப்பு.

எத்தனை பேர் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், கும்ப்ளே ராஜினாமா செய்திருந்தது உண்மையென்றால், நான் சேவாக்கை அந்த பதவியில் இருக்க வேண்டும் என்று பார்க்கிறேன். வேலை நெறிமுறையில் அனில் கும்ப்ளே மிகவும் சிறப்பானவர். இவர் எப்போதும் வெளிப்படைத்தன்மை வாய்ந்தவர்.




இதே பாணியில் உள்ளவர் சேவாக். இவரைப் போன்றவர்கள்தான் அணியை நடத்த தேவையானவர்கள். இவரால் அனைத்து சாதனைகளையும் உடைக்க முடியும். இந்திய அணிக்கு அடுத்த இரண்டு வருட் மிகவும் கடினமாக இருக்கப்போகிறது’’ என்றார்.
Tags:    

Similar News