செய்திகள்
டி.என்.பி.எல். கிரிக்கெட் லோகோ வெளியீட்டு விழா நடந்த போது எடுத்த படம்.

டி.என்.பி.எல். கிரிக்கெட்: முதல் ஆட்டத்தில் தூத்துக்குடி- திண்டுக்கல் அணிகள் மோதல்

Published On 2017-06-21 02:50 GMT   |   Update On 2017-06-21 02:50 GMT
அடுத்த மாதம் (ஜூலை) 22-ந்தேதி தொடங்கும் 2-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்சுடன் சென்னையில் சந்திக்கிறது.
சென்னை :

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 2-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 8 அணிகள் இடையிலான இந்த போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 22-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 20-ந்தேதி வரை சென்னை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய 3 இடங்களில் நடத்தப்படுகிறது.

ஜூலை 22-ந்தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்சுடன் சென்னையில் சந்திக்கிறது. கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் திருவள்ளூர் வீரன்சுடன் ஜூலை 24-ந்தேதி நெல்லையில் மோதுகிறது.



சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தனது அடுத்த லீக் ஆட்டங்களில் கோவை கிங்சை ஜூலை 29-ந்தேதியும் (சென்னை), தூத்துக்குடி பேட்ரியாட்சை ஆகஸ்டு 1-ந்தேதியும் (நெல்லை), காரைக்குடி காளையை ஆகஸ்டு 4-ந்தேதியும் (சென்னை), மதுரை சூப்பர் ஜெயன்ட்டை ஆகஸ்டு 6-ந்தேதியும் (சென்னை), திருச்சி வாரியர்சை ஆகஸ்டு 9-ந்தேதியும் (திண்டுக்கல்), திண்டுக்கல் டிராகன்சை ஆகஸ்டு 13-ந்தேதியும் (திண்டுக்கல்) எதிர்கொள்கிறது. ஆட்டங்கள் மாலை 3.30 மணி, இரவு 7.30 மணி ஆகிய நேரங்களில் தொடங்கி நடைபெறும்.

இதற்கான போட்டிச்சின்னம் (லோகோ) வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் என்.சீனிவாசன் லோகோவை அறிமுகப்படுத்தினார். விழாவில் அணி நிர்வாகிகளும், வீரர்களும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News