search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TNPL Cricket"

    • கோவை கிங்ஸ் அணி 2-வது முறையாக டி.என்.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
    • தனது முதல் இறுதி ஆட்டத்திலேயே சாம்பியன் பட்டம் வெல்லும் வேட்கையில் நெல்லை அணி உள்ளது.

    நெல்லை:

    7-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 12-ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியின் பிளே ஆப் சுற்று போட்டிகள் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. அன்று நடந்த முதல் தகுதிச்சுற்றில் (குவாலிபயர் -1) கோவை கிங்ஸ் அணி 30 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. சனிக்கிழமை நடந்த வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் 4 ரன் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை தோற்கடித்தது.

    நெல்லையில் நடந்த 2-வது தகுதிச்சுற்றில் (குவாலிபயர்-2) நெல்லை ராயல் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    இந்நிலையில், டி.என்.பி.எல். இறுதிப்போட்டி நெல்லையில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ், அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டி.என்.பி.எல். கோப்பையைக் கைப்பற்றப் போவது கோவையா, நெல்லையா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

    கோவை கிங்ஸ் அணி 2-வது முறையாக டி.என்.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி கடந்த ஆண்டு சேப்பாக் சூப்பர் கில்லீசுடன் இணைந்து கூட்டாக சாம்பியன் பட்டம் பெற்றது.

    கோவை அணி லீக் ஆட்டத்தில் நெல்லையிடம் 181 ரன் குவித்தும் தோல்வியை தழுவியது. அதற்கு இறுதிப்போட்டியில் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் கோவை கிங்சுக்கு இருக்கிறது. அந்த அணி இந்த தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோற்று இருந்தது. தனது முதல் இறுதி ஆட்டத்திலேயே சாம்பியன் பட்டம் வெல்லும் வேட்கையில் நெல்லை ராயல் கிங்ஸ் உள்ளது. கோவையை லீக் ஆட்டத்தில் வென்றுள்ளதால் நெல்லை அணி நம்பிக்கையுடன் விளையாடும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு நெல்லை ராயல் கிங்சுக்கு கூடுதல் பலமாகும்.

    • கோவை அணி லீக் ஆட்டத்தில் நெல்லையிடம் 181 ரன் குவித்தும் தோல்வியை தழுவியது.
    • அதற்கு இறுதி போட்டியில் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் கோவை கிங்சுக்கு இருக்கிறது.

    நெல்லை:

    7- வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 12- ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியின் லீக் ஆட்டங்கள் 5- ந் தேதியுடன் முடிவடைந்தது.

    பிளே ஆப் சுற்று போட்டிகள் 7- ந் தேதி தொடங்கியது. அன்று நடந்த முதல் தகுதி சுற்றில் (குவாலிபயர் -1) கோவை கிங்ஸ் அணி 30 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சனிக்கிழமை நடந்த வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் 4 ரன் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை தோற்கடித்தது.

    நெல்லையில் நேற்று நடந்த 2- வது தகுதி சுற்றில் (குவாலிபயர்-2) நெல்லை ராயல் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    இன்று ஓய்வு நாளாகும். இறுதிப்போட்டி நெல்லையில் நாளை (12- ந் தேதி) இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் - அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டி.என்.பி. எல். கோப்பை கைப்பற்றப்போவது கோவையா? நெல்லையா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

    கோவை கிங்ஸ் அணி 2-வது முறையாக டி.என்.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி கடந்த ஆண்டு சேப்பாக் சூப்பர் கில்லீசுடன் இணைந்து கூட்டாக சாம்பியன் பட்டம் பெற்றது.

    கோவை அணி லீக் ஆட்டத்தில் நெல்லையிடம் 181 ரன் குவித்தும் தோல்வியை தழுவியது. அதற்கு இறுதி போட்டியில் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் கோவை கிங்சுக்கு இருக்கிறது. அந்த அணி இந்த தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோற்று இருந்தது.

    தனது முதல் இறுதி ஆட்டத்திலேயே சாம்பியன் பட்டம் வெல்லும் வேட்கையில் நெல்லை ராயல் கிங்ஸ் உள்ளது.

    கோவையை லீக் ஆட்டத்தில் வென்று இருந்ததால் நெல்லை அணி நம்பிக்கையுடன் விளையாடும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு ராயல் கிங்சுக்கு கூடுதல் பலமாகும். அந்த அணி இந்த சீசனில் 7 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. கடைசியாக 3 போட்டியில் வெற்றி பெற்று முத்திரை பதித்தது. 2 போட்டியில் தோற்றது.

    • 44 பந்துகளில் 73 ரன்களை குவித்த அஜித்தேஷ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடினார்.
    • 20 ஓவர் முடிவில் நெல்லை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து நெல்லை ராயல் கிங்ஸ் அபாரமாக வென்றது.

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்று நெல்லை சங்கர் நகரில் உள்ள ஐ.சி.எல். மைதானத்தில் நடைபெறும் 2-வது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்சும், நெல்லை ராயல் கிங்சும் மோதின.

    டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. திண்டுக்கல் அணி பேட்டிங் செய்தது.

    திண்டுக்கல் அணியின் துவக்க வீரர் விமல் குமார் 16 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த நிலையில், சிவம் சிங்-பூபதி குமார் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தது.

    குறிப்பாக சிவம் சிங் பந்துகளை சிக்சர்களாக விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

    பூபதி குமார் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அரை சதம் கடந்த சிவம் சிங் 76 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவர் 46 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எட்டினார்.

    அவரைத் தொடர்ந்து ஆதித்ய கணேஷ் 13 ரன்களிலும், சரத் குமார் 9 ரன்களிலும் ஆட்டமிழக்க, திண்டுக்கல் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. சுபோத் 6 ரன்களுடனும், கேப்டன் பாபா இந்திரஜித் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    நெல்லை அணி தரப்பில் சோனு யாதவ் 2 விக்கெட் வீழ்த்தினார். சந்தீப் வாரியர், பொய்யாமொழி, லக்சய் ஜெயின் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸ் களமிறங்கியது.

    அஜித்தேஷ் குருசுவாமி அதிரடியாக விளையாடினார். 44 பந்துகளில் 73 ரன்களை குவித்த அஜித்தேஷ் இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை.

    ரித்திக் ஈஸ்வரன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடினார்.

    நிதிஷ் ராஜகோபால் மற்றும் அருண் கார்த்திக் தலா 26 ரன்களும், சுகேந்திரன் 22 ரன்களும் எடுத்தனர்.

    19.4 ஓவரின்போது 2 பந்துக்கு 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அஜித்தேஷ் மற்றும் ரித்திக் விளையாடினர்.

    இந்நிலையில், 20 ஓவர் முடிவில் நெல்லை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து நெல்லை ராயல் கிங்ஸ் அபாரமாக வென்றது.

    இதன்மூலம், நெல்லை ராயல் கிங்ஸ் 2வது குவாலிபையர் சுற்றில் வெற்றிப் பெற்று இறுதிச்சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

    நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் அணியுடன் நெல்லை ராயல் கிங்ஸ் மோதுகிறது.

    • திண்டுக்கல் அணியில் சிவம் சிங்-பூபதி குமார் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தது.
    • சிவம் சிங் 46 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் விளாசினார்.

    நெல்லை:

    டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்று நெல்லை சங்கர் நகரில் உள்ள ஐ.சி.எல். மைதானத்தில் நடைபெறும் 2-வது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்சும், நெல்லை ராயல் கிங்சும் மோதுகின்றன. டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. திண்டுக்கல் அணி பேட்டிங் செய்தது.

    திண்டுக்கல் அணியின் துவக்க வீரர் விமல் குமார் 16 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த நிலையில், சிவம் சிங்-பூபதி குமார் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தது. குறிப்பாக சிவம் சிங் பந்துகளை சிக்சர்களாக விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். பூபதி குமார் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். அரை சதம் கடந்த சிவம் சிங் 76 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவர் 46 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எட்டினார்.

    அவரைத் தொடர்ந்து ஆதித்ய கணேஷ் 13 ரன்களிலும், சரத் குமார் 9 ரன்களிலும் ஆட்டமிழக்க, திண்டுக்கல் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. சுபோத் 6 ரன்களுடனும், கேப்டன் பாபா இந்திரஜித் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    நெல்லை அணி தரப்பில் சோனு யாதவ் 2 விக்கெட் வீழ்த்தினார். சந்தீப் வாரியர், பொய்யாமொழி, லக்சய் ஜெயின் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸ் களமிறங்குகிறது.

    இப்போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் அணியுடன் மோதும்.

    • நெல்லையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்சும், நெல்லை ராயல் கிங்சும் மோதுகின்றன.
    • பாபா இந்திரஜித் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் லீக் சுற்று முடிவில் 12 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்தது.

    நெல்லை:

    7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. நெல்லை சங்கர் நகரில் உள்ள ஐ.சி.எல். மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்சும், நெல்லை ராயல் கிங்சும் மோதுகின்றன.

    பாபா இந்திரஜித் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் லீக் சுற்று முடிவில் 12 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்தது. முதலாவது தகுதி சுற்றில் 30 ரன்கள் வித்தியாசத்தில் கோவையிடம் தோற்ற திண்டுக்கல் அணிக்கு இன்னொரு வாய்ப்பு கிட்டியுள்ளது.

    அந்த ஆட்டத்தில் மாற்று வீரர் சரத்குமார் (8 சிக்சருடன் 62 ரன்), வேகப்பந்து வீச்சாளர் சுபோத் பாட்டி (4 விக்கெட்) தவிர்த்து மற்றவர்கள் சோபிக்கவில்லை. கேப்டன் இந்திரஜித், ஷிவம் சிங், வருண் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் கைகொடுத்தால் தான் எழுச்சி பெற முடியும்.

    ஏற்கனவே லீக் சுற்றில் நெல்லையை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இருப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் விளையாடுவார்கள். இதில் வெற்றி பெற்றால் திண்டுக்கல் அணி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணி லீக் சுற்றில் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தை பெற்றது. அதைத் தொடர்ந்து நடந்த பரபரப்பான வெளியேற்றுதல் சுற்றில் ராஜகோபால், அஜிதேஷ் ஆகியோரது அரைசதத்தின் உதவியுடன் 4 ரன் வித்தியாசத்தில் மதுரையை விரட்டியது.

    அதே உத்வேகத்துடன் முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டும் வேட்கையில் அதுவும் உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் நெல்லை வீரர்கள் வரிந்து கட்டுவதற்கு ஆயத்தமாகியுள்ளனர். இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இதில் வெற்றி காணும் அணி 12-ந்தேதி நடக்கும் மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் கோவை கிங்சை சந்திக்கும்.

    • வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) இன்று இரவு 7.15 மணிக்கு சேலத்தில் நடக்கிறது.
    • மதுரை அணி நெல்லைக்கு பதிலடி கொடுத்து குவாலிபயர்-2 ஆட்டத்துக்கு தகுதி பெறும் வேட்கையில் உள்ளது.

    சேலம்:

    7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 12-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியின் லீக் ஆட்டங்கள் 5-ந் தேதியுடன் முடிவடைந்தது.

    லீக் முடிவில் கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

    ஒருநாள் ஓய்வுக்கு பிறகு பிளே ஆப் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கியது. சேலத்தில் நடந்த முதல் தகுதி சுற்றில் (குவாலிபயர்-1) கோவை கிங்ஸ் அணி 30 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி தொடர்ந்து 2-வது தடவையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) இன்று இரவு 7.15 மணிக்கு சேலத்தில் நடக்கிறது. இதில் அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ்-ஹரி நிஷாந்த் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி குவாலிபயர்-2 ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சுடன் மோதும். தோல்வி அடையும் அணி வெளியேற்றப்படும்.இதனால் இரு அணிகளும் வெற்றி பெற கடுமையாக போராடும்.

    நெல்லை ராயல் கிங்ஸ் லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சை வீழ்த்தி இருந்தது. இதனால் அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும். நெல்லை அணி லீக் சுற்றில் 5-ல் வெற்றி பெற்றது. 2 ஆட்டத்தில் தோற்று இருந்தது.

    மதுரை அணி நெல்லைக்கு பதிலடி கொடுத்து குவாலிபயர்-2 ஆட்டத்துக்கு தகுதி பெறும் வேட்கையில் உள்ளது. அந்த அணி 4 போட்டியில் வெற்றி பெற்றது. 3 ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.

    இரு அணிகளும் வெற்றிக்காக போராடுவார்கள் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • இன்று நடக்க உள்ள கடைசி லீக் போட்டியில் திருச்சி - நெல்லை அணிகள் மோதுகின்றன.
    • டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்றுடன் லீக் சுற்று நிறைவடைகிறது.

    நெல்லை:

    டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்றுடன் லீக் சுற்று நிறைவடைகிறது. இன்று நடக்க உள்ள கடைசி லீக் போட்டியில் திருச்சி - நெல்லை அணிகள் மோதுகின்றன.

    கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் , மதுரை ஆகிய 4 அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு ஏற்கனேவே தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • மதுரை அணி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது.
    • திருச்சி அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

    நெல்லை:

    7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 12-ந் தேதி தொடங்கி யது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

    ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    கோவை, திண்டுக்கல், சேலம் ஆகிய இடங்களில் லீக் ஆட்டங்கள் முடிந்துவிட்டன. நேற்று முதல் டி.என். பி.எல் போட்டிகள் நெல்லையில் தொடங்கியது. நேற்றைய ஆட்டங்களில் சேலம் ஸ்பார்டன்ஸ் 8 ரன்னில் திருப்பூர் தமிழன்சையும், திண்டுக்கல் டிராகன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்சையயும் தோற்கடித்தன.

    இதுவரை 23 போட்டிகள் முடிவடைந்துள்ளன. கோவை கிக்ஸ் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. நேற்றைய போட்டிகள் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் ஆகியவை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

    இன்னும் ஒரு அணி தகுதி பெற வேண்டும். இதற்கான போட்டியில் மதுரை பாந்தர்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் ஆகிய அணிகள் உள்ளன.

    திருச்சி அணி தான் மோதிய 5 ஆட்டத்திலும் தோற்று வெளியேறின.

    இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.15 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஹரி நிஷாந்த் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ்-ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    மதுரை அணி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி கோவையை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது.

    கோவை அணி 5 வெற்றி, 1 தோல்வியுடன் 10 புள்ளியுடன் முதல் இடத்தில் உள்ளது. மதுரையை வீழ்த்தி 12 புள்ளியுடன் தொடர்ந்து முதல் இடத்தை பிடிக்கும் வேட்கையில் உள்ளது.

    இரவு 7.15 மணிக்கு நடை பெறும் 2-வது ஆட்டத்தில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கங்கா ஸ்ரீதர் ராஜூ தலைமையிலான பால்சி திருச்சி அணிகள் மோதுகின்றன.

    நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் இருக்கிறது. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் இருக்க கடைசி ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டும். திருச்சி அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

    • நாளை இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-பால்சி திருச்சி அணிகள் மோதுகின்றன.
    • அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது.

    நெல்லை:

    7-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. நாளை இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கிறது.

    மாலை 3.15 மணிக்கு நடக்கும் 24-வது லீக் ஆட்டத்தில் மதுரை ஸ்பார் டன்ஸ்கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    நெல்லையில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் போட்டி நடக்கிறது.

    கோவை அணி 6 ஆட்டத்தில் 5 வெற்றி, ஒரு தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. அந்த அணியில் கேப்டன் ஷாருக்கான், சுஜய், ராம் அரவிந்த், எம்.முகமது சித்தார்த், தாமரை கண்ணன், யுதீஸ்வரன் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    கோவை அணியின் நட்சத்திர வீரர் சாய் சுதர்சன், முதல் தர போட்டிகளில் விளையாட இருப்பதால் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகி உள்ளார்.

    மதுரை அணி 5 ஆட்டத் தில் 3 வெற்றி, 2 தோல்வி யுடன் 6 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பிளே-ஆப் சுற்றை நெருங்க இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும்.

    அந்த அணியில் கேப்டன் ஹரி நிஷாந்த், வாஷிங்டன் சுந்தர், கவுசிக், பி.சரவணன், முருகன் அஸ்வின், குர்ஜப்னீத்சிங், ஸ்வப்னில் சிங், அஜய் கிருஷ்ணா போன்ற வீரர்கள் உள்ளனர்.

    நெல்லையில் நாளை இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-பால்சி திருச்சி அணிகள் மோதுகின்றன.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 ஆட்டத்தில் 2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது.

    அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க நாளைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி பெற வேண்டியது முக்கியமாகும். அதன்பின் மற்ற அணிகளின் போட்டி முடிவுகள் சாதகமாக அமைய வேண்டும்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கில் ஜெகதீ சன், பாபா அபராஜித், சந்தோஷ் ஷிவ், பிரதோஷ் ரஞ்சன் பால் ஆகியோர் உள்ளனர். பந்து வீச்சில் ரஹில் ஷா, ரோகித், ஹரீஷ் குமார், எம்.சிலம்பரசன் ஆகியோர் உள்ளனர்.

    திருச்சி அணி இதுவரை மோதிய 5 ஆட்டத்திலும் தோற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. அந்த அணி ஆறுதல் வெற்றிக்காக போராடும்.

    • சேலம் அணி 5 ஆட்டங்களில் ஒரு வெற்றி, 4 தோல்விகளுடன், 2 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.
    • நெல்லை அணி 5 ஆட்டத்தில் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது.

    நெல்லை:

    தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி (டி.என்.பி.எல்.) கடந்த 12-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. கோவையில் 6 லீக் ஆட்டங்களும், திண்டுக்கலில் 7 ஆட்டங்களும், சேலத்தில் 8 ஆட்டங்களும் நடந்தன. சேலத்தில் நடந்த லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி கட்ட லீக் போட்டிகள் நெல்லையில் நாளை முதல் இந்தியா சிமெண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. அங்கு 7 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது.

    நாளை இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.15 மணிக்கு நடக்கும் 22-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    திருப்பூர் அணி 5 ஆட்டத்தில் 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி 3-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க வெற்றி பெறுவது திருப்பூர் அணிக்கு அவசியமாகும். அந்த அணி பேட்டிங்கில் ராதாகிருஷ்ணன், கேப்டன் சாய் கிஷோர், விஜய் சங்கர், ரஹேஜா, அனிருத் ஆகியோரும், பந்து வீச்சில் புவனேஸ்வரன், அஜித்ராம், பெரியசாமி மணிகண்டன் ஆகியோரும் உள்ளனர்.

    சேலம் அணி 5 ஆட்டங்களில் ஒரு வெற்றி, 4 தோல்விகளுடன், 2 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெறுவது அவசியமாகும். பின்னர் மற்ற அணிகளின் முடிவுகளும் சாதகமாக இருக்க வேண்டும். சேலம் அணியில் கேப்டன் அபிஷேக் தன்வார், சன்னி சந்து, கவுசிக் காந்தி, கணேஷ் மூர்த்தி, அமித் சாத்வீக், அபிஷேக், ஆகாஷ் சுமரா ஆகிய வீரர்கள் உள்ளனர். இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    நெல்லை அணி 5 ஆட்டத்தில் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும்.

    அருண்கார்த்திக் தலைமையிலான நெல்லை அணியில் அஜிதேஷ், நிரஞ்சன், சூரிய பிரகாஷ் ஈஸ்வரன், சோனு யாதவ், பொய்யாமொழி, மோகன் பிரசாத், லக்சய் ஜெயின் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    அஸ்வின் தலைமையிலாக திண்டுக்கல் அணியும் 5 ஆட்டத்தில் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. ரன்-ரேட் அடிப்படையில் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணியும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை உறுதிசெய்வதிலும் அந்த அணியின் பாபா இந்திரஜித், ஷிரேம் சிங், ஆதித்ய கணேஷ், வருண் சக்கரவர்த்தி, சரவண குமார், சுபோத்பாட்டி, மதிவாணன் ஆகியோர் உள்ளனர்.

    இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • டி.என்.பி.எல். கோட்யின் 20-வது ‘லீக்’ ஆட்டம் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது.
    • திருப்பூர் தமிழன்ஸ் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.

    சேலம்:

    8 அணிகள் பங்கேற்கும் 7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது சேலத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த 19-வது 'லீக்' ஆட்டத்தில் கோவை கிங்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. இதில் கோவை அணி 79 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    அந்த அணி பெற்ற 5-வது வெற்றியாகும். இதன் மூலம் 10 புள்ளிகளுடன் கோவை கிங்ஸ் முதல் அணியாக 'பிளேஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணி கடைசி ஆட்டத்தில் மதுரை பாந்தர்சை ஜூலை 2-ந்தேதி சந்திக்கிறது. சேலம் அணி 4-வது தோல்வியை தழுவியது. 2 புள்ளியுடன் இருக்கும் அந்த அணி 6-வது போட்டியில் திருப்பூர் தமிழன்சை 1-ந்தேதி எதிர்கொள்கிறது.

    டி.என்.பி.எல். கோட்யின் 20-வது 'லீக்' ஆட்டம் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ்-சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    திண்டுக்கல் அணி 3 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி திருப்பூர் தமிழன்சை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.

    திருப்பூர் தமிழன்ஸ் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 3-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.

    • கோவை கிங்ஸ் அணி 5 வெற்றி 1 தோல்வியுடன் முதல் இடத்தில் உள்ளது.
    • சேலம் அணி 1 வெற்றி 3 தோல்வியுடன் 7-வது இடத்தில் உள்ளது.

    சேலம்:

    7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தற்போது சேலத்தில் நடைபெற்று வருகின்றன.

    இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும்.

    டி.என்.பி.எல். போட்டியில் நேற்றுடன் 18 ஆட்டங்கள் முடிவடைந்தது. கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் தலா 8 புள்ளிகளுடன் முதல் 2 இடங்களில் உள்ளன.

    திண்டுக்கல் டிராகன்ஸ் 6 புள்ளியுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் ஆகியவை தலா 4 புள்ளிகளுடன் முறையே 4 முதல் 6-வது இடங்களில் உள்ளன. சேலம் அணி 2 புள்ளிகளுடன் இருக்கிறது. திருச்சி அணி தான் மோதிய 4 ஆட்டங்களிலும் தோற்று புள்ளி எதுவும் பெறாமல் கடைசி இடத்தில் உள்ளது.

    இன்று இவு 7.15 மணிக்கு 19-வது லீக் ஆட்டம் நடக்கிறது. இது ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ்-அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கோவை கிங்ஸ் அணி சேலத்தை வீழ்த்தி 5-வது வெற்றியுடன் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் இருக்கிறது.

    அந்த அணி திருப்பூர் தமிழன்ஸ் (70 ரன்), சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (8 விக்கெட்), பால்சி திருச்சி (6 விக்கெட்), திண்டுக்கல் டிராகன்ஸ் (59 ரன்) ஆகியவற்றை வீழ்த்தி இருந்தது. நெல்லை ராயல் கிங்சிடம் 4 விக்கெட்டில் தோற்றது.

    சேலம் அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. அந்த அணி திருச்சியை மட்டும் 5 விக்கெட்டில் வென்றது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (52 ரன்), நெல்லை ராயல் கிங்ஸ் (5 விக்கெட்) மதுரை பாந்தர்ஸ் (7 விக்கெட்) ஆகியவற்றிடம் தோற்றது.

    ×