செய்திகள்

மாநில மகளிர் கிரிக்கெட் அணிகள் தேர்வு சென்னையில் நடக்கிறது

Published On 2017-04-29 04:49 GMT   |   Update On 2017-04-29 04:49 GMT
16 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மாநில மகளிர் கிரிக்கெட் அணிக்கான வீராங்கனைகள் தேர்வு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் (மே) 6-ந்தேதி நடக்கிறது.
சென்னை :

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 16 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மாநில மகளிர் கிரிக்கெட் அணிக்கான வீராங்கனைகள் தேர்வு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் உள்ள ‘பி’ மைதானத்தில் அடுத்த மாதம் (மே) 6-ந் தேதி காலை 7.30 மணிக்கு நடக்கிறது.

இதில் சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களை சேர்ந்த வீராங்கனைகள் கலந்து கொள்ளலாம். இந்த தேர்வில் பங்கேற்க விரும்புபவர்கள் பிறப்பு, இருப்பிட சான்றிதழ் மற்றும் புகைப்படத்துடன் அடையாள அட்டையுடன் வர வேண்டும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணைசெயலாளர் ஆர்.ஐ.பழனி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News