இந்தியா

குடியரசு தின விழா நிறைவாக முப்படைகளும் பாசறைக்கு திரும்பும் நிகழ்வு

Published On 2024-01-29 13:08 GMT   |   Update On 2024-01-29 13:08 GMT
  • இசைக் கருவிகளை இசைக்க, ஜனாதிபதி திரவுபதி முர்மு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தார்.
  • தேச பற்று பாடல்கள் இசைத்தப்படி பிரமாண்டமாக அணிவகுப்பு நடந்தது.

குடியரசு தின விழா முடிந்த மூன்றாவது நாள் அதில் பங்கேற்ற முப்படை வீரர்கள் பாசறைக்கு திரும்புவது வழக்கம். இந்த நிகழ்வு டெல்லியில் உள்ள விஜய் சவுக்கில் இன்று நடைபெற்றது.

முப்படைகளை சேர்ந்த வீரர்கள் இசைக் கருவிகளை இசைக்க, ஜனாதிபதி திரவுபதி முர்மு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தார். அவரை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வரவேற்றனர். மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட், துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராணுவம், கடற்படை, விமானப்படை, மாநில போலீசார், மத்திய போலீசார், ஆயுதப்படை வீரர்கள், டிரம்ஸ் இசைக்குழுவினர் உள்ளிட்டோர் அணிவகுப்பு நடத்தினர்.

தேச பற்று பாடல்கள் இசைத்தப்படி பிரமாண்டமாக அணிவகுப்பு நடந்தது. இதனை காண, ஏராளமான மக்கள் விஜய் சவுக் பகுதிக்கு வருகை தந்தனர். வசுதேவ குடும்பகம் வடிப்பில் இந்த அணி வகுப்பானது நடைபெற்றது.

Tags:    

Similar News