தெலுங்கானாவில் வாக்காளர்கள் பெயர் நீக்கம்- தேர்தல் 'தில்லு முல்லு' தகவல் சேகரிக்கும் பா.ஜ.க.
- தமிழகத்திலும் சில தொகுதிகளில் வேட்பாளர்கள் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக பா.ஜ.க.வினர் குற்றம் சாட்டினர்.
- தேர்தலுக்குப் பிறகு தெலுங்கானாவிலும் இதேபோல பா.ஜ.க. தலைவர்கள் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
தெலுங்கானா மாநிலத்தில் 17 பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த 13-ந்தேதி வாக்கு பதிவு நடந்தது.
இதில் பா.ஜ.க. வெற்றி பெறும் என நம்பிக்கையுடன் உள்ள சில தொகுதிகளில் வாக்காளர்கள் பெயர் திடீரென நீக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக தெலுங்கானா பா.ஜ.க தலைவர் கிஷன் ரெட்டி கூறுகையில்:-
சில தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் இருந்து 20 ஆயிரம் முதல் 30,000 வரையிலான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
ஒரு வாரத்திற்கு முன்பு வாக்காளர் சீட்டு பெற்றவர்கள் கூட தங்கள் பெயர்கள் நீக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக தெலுங்கானாவில் உள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த போதிலும் வேண்டுமென்றே வாக்காளர்கள் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
மேலும் வாக்காளர் பட்டியலை உருவாக்குவதில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும்.
தெலுங்கானா மாநிலத்தில் தேர்தலில் முறைகேடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தில்லுமுல்லு நடந்தது. இது குறித்து முழுமையான தகவல்களை சேகரித்து வருகிறோம்.
இதன் அடிப்படையில் முறையீடுகள் நடந்த பகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த கோரிக்கை விடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்திலும் சில தொகுதிகளில் வேட்பாளர்கள் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக பா.ஜ.க.வினர் குற்றம் சாட்டினர்.
தேர்தலுக்குப் பிறகு தெலுங்கானாவிலும் இதேபோல பா.ஜ.க. தலைவர்கள் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.