இந்தியா

இந்துக் கடவுள்களின் புகைப்படங்கள் அடங்கிய காகிதத்தில் கோழி கறி விற்பனை செய்த நபர் கைது

Published On 2022-07-05 06:23 GMT   |   Update On 2022-07-05 06:23 GMT
  • இந்து தெய்வங்களின் படங்கள் அடங்கிய காகிதத்தில் கோழி இறைச்சியை விற்று மத உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றச்சாட்டு.
  • இந்த சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் சம்பாலில் தலிப் ஹூசைன் என்பவர் இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இவர் இந்து கடவுள்களின் படங்கள் அடங்கிய காகிதத்தில் கோழி விற்பனை செய்து வந்ததாக சிலர் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து, போலீஸ் குழுவினர் தலிப் ஹூசைனின் கடையை அடந்தபோது, அவரை மர்மநபர்கள் கத்தியால் தாக்கியதாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், தலீப் ஹூசைன் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், இந்து தெய்வங்களின் படங்கள் அடங்கிய காகிதத்தில் கோழி இறைச்சியை விற்று மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி போலீசார் தலீப் ஹூசைனை கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News