இந்தியா

கேரளாவில் ஒரே நாளில் 4098 பேருக்கு கொரோனா- திருவனந்தபுரத்தில் மட்டும் 1034 பேர் பாதிப்பு

Update: 2022-06-25 04:30 GMT
  • திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் 1034 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
  • தொற்று கண்டறியப்பட்டவர்களில் பலரும் தற்போது வீடுகளிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

திருவனந்தபுரம்:

கேரளாவில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

கேரளா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 4098-ஆக அதிகரித்து உள்ளது. 9 பேர் பலியாகி உள்ளனர்.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் 1034 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொற்று கண்டறியப்பட்டவர்களில் பலரும் தற்போது வீடுகளிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதற்கிடையே மாநிலம் முழுவதும் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் நோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத்துறையினர் அறிவித்து உள்ளனர்.

இதுபோல பொது மக்கள் முக கவசம் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத்துறையினர் அறிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News