இந்தியா

உ.பி.யில் துர்கா பூஜை பந்தலில் தீ விபத்து: 3 பேர் பலி- 42 பேர் படுகாயம்

Update: 2022-10-03 04:09 GMT
  • தீவிபத்தில் 10 மற்றும் 12 வயதை சேர்ந்த இரு சிறுவர்கள், 45 வயது மதிக்கத்தக்க பெண் உயிரிழந்துள்ளனர்.
  • 33 பேர் பலத்த தீக்காயங்களுடன் வாரணாசியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் பதோஹியில் துர்கா பூஜை நடைபெற்றது. இதற்காக, பெரிய பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று துர்கா பூஜையில் 300 பேர் கலந்துக் கொண்டனர்.

இந்நிலையில், பந்தலில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதை அடுத்து தீயில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 42 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 10 மற்றும் 12 வயதை சேர்ந்த இரு சிறுவர்கள், 45 வயது மதிக்கத்தக்க பெண் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், மீட்புப் பணிகளை மேற்பார்வையிட மாவட்டத்தின் பிற மூத்த அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

விபத்தில் சிக்கியவர்களில் 9 பேர் உள்ளூர் மருத்துவமனையிலும், மேலும் 33 பேர் வாரணாசியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

Tags:    

Similar News