இந்தியா

தொற்று பாதிப்பு உயர்வு- இந்தியாவில் புதிதாக 16,159 பேருக்கு கொரோனா

Published On 2022-07-06 04:13 GMT   |   Update On 2022-07-06 04:13 GMT
  • கொரோனா பாதிப்பால் கேரளா, மகாராஷ்டிராவில் தலா 6 பேர் உள்பட மேலும் 28 பேர் இறந்துள்ளனர்.
  • மொத்த பலி எண்ணிக்கை 5,25,270 ஆக உயர்ந்தது.

புதுடெல்லி:

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,159 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக கூறி உள்ளது.

நேற்று பாதிப்பு 13,086 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் 3,098, தமிழ்நாட்டில் 2,662, கேரளாவில் 2,603, மேற்கு வங்கத்தில் 1,973 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 35 லட்சத்து 47 ஆயிரத்து 809 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பால் கேரளா, மகாராஷ்டிராவில் தலா 6 பேர் உள்பட மேலும் 28 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,25,270 ஆக உயர்ந்தது.

தொற்று மீட்பு சிகிச்சையில் இருந்து 15,394 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 7 ஆயிரத்து 327 ஆக உயர்ந்தது.

தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,15,212 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றை விட 737 அதிகம் ஆகும்.

நாடு முழுவதும் நேற்று 9,95,810 டோஸ்களும், இதுவரை 198 கோடியே 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி இதுவரை 86.49 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று 4,54,465 மாதிரிகள் அடங்கும்.

Tags:    

Similar News